
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் விவசாயம் செய்து தனது குடும்பத்திற்கு தேவையை பூர்த்தி செய்து மனைவி, ஒரு பிள்ளை என அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் விவசாயி விதார்த். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதார்த் அப்பா வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது. விசயம் அறிந்து வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, அவரது தந்தையின் பெயரில் நெல் அறுவடை இயந்திரம் வங்கி கடனில் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கும் விதார்த், இதில் ஏதோ மோசடி இருக்கிறது, என்பதை உணர்கிறார்.
வழக்கறிஞரின் உதவியுடன் வங்கியில் நடந்த மோசடியை கோர்ட்டில் முறையிட்டு பின்னணியை கண்டறிந்து, நிலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் விதார்த் நிலத்தை மீட்டாரா ? இல்லையா ? என்பதை விவசாயிகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் பிரச்சனையை திரைக்கதையாக திரையில் விழிப்புணர் ஏற்படுத்தி உள்ளார் இயக்குனர்.