இறுதி முயற்சி திரை விமர்சனம்

நாயகனாக  ரஞ்சித், துணிக்கடை நடத்த கடன் வாங்குகிறார் எதிர்பாராத விதமாக கடன் ஏற்பட நிம்மதி இழந்து தவிக்கும் குடும்ப தலைவன் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். ஒரு பக்கம் கடனை அடைக்க பணம் புரட்ட முயற்சிப்பது, மறுபக்கம் குடும்பத்தின் நிலை எண்ணி வருந்துவது என்று காட்சி காட்சி குடும்பத்தின் அவல நிலையை தனது நடிப்பின் மூலம் திரையில் அனைவரின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார் குடும்பத் தலைவனாக ரஞ்சித்.

ரஞ்சித்தின் மனைவியாக நடித்திருக்கும் மெஹாலி மீனாட்சி கணவன் நிலை மற்றும் சூழல் அறிந்து நடக்கும் மனைவியாக எதார்த்தமாக நடித்து திரையில் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்

நாயகன் ரஞ்சித், தான் வாங்கிய கடன் தொகையை விட அதிகமாக வட்டி தொகை கட்டியும், கோடிக்கணக்கில் பணம் கேட்டு கந்துவட்டி ரவுடிகளால் மிரட்டப்படுவதோடு, அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் ரவுடிகள் தொல்லை கொடுக்கின்றனர். கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே, சென்னையில் தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி ஒருவர், போலீசிடம் இருந்து தப்பி ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி விடுகிறார்.
தனது இறுதி முயற்சியில் நாயகன் வெற்றி பெற்றாரா?
தன் கடன் தொகையை நாயகன் எவ்வாறு எதிர் கொண்டார்?
இது போன்ற கேள்விக்கு பதில் இறுதி முயற்சி திரைக்கதை .