Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பிளாக்மெயில் சினிமா விமர்சனம்

Posted on September 13, 2025

மணி (ஜி.வி. பிரகாஷ்) ஒரு மருந்து விநியோகஸ்தரிடம் (முத்துக்குமார்) வேலை செய்கிறார், அவர் ஒரு ரகசியமாக போதைப்பொருள் கடத்தல் தொழிலையும் நடத்துகிறார். ஒரு நாள், மணி தனது காதலி, ஒரு மருந்தகத்தில் பணிபுரியும் ரேகா (தேஜு அஸ்வினி) கர்ப்பமாக இருப்பதை அறிந்து காதலி கருக்கலைப்பு செய்ய விரும்பினாலும், அவளையும் பிறக்காத குழந்தையும் கவனித்துக் கொள்ள இன்னும் கடினமாக உழைப்பேன் என்று மணி உறுதி அளிக்கிறார். இந்நிலையில்,

மருந்து விநியோகஸ்தர் முத்துக்குமார் மணியிடம் ஒரு பார்சலை கொடுத்து குறிப்பிட்ட நபரிடம் டெலிவரி செய்யும்படி கூறுகிறார். சரக்கு வண்டியில் பார்சலை வைத்து விட்டு மருந்து கடையில் மருந்து பார்சல் டெலிவரி கொடுத்து விட்டு அப்படியே அங்கு வேலை பார்க்கும் காதலியிடம் பேசிவிட்டு வெளியே வந்து பார்க்கும் போது தான் ஓட்டி வந்த வாகனம் டெலிவரிக்கு கொடுக்க இருந்த பொருட்களுடன் காணாமல் போனது தெரிய வருகிறது.

அப்போது அந்த பார்சலில் இருந்தது ஐம்பது லட்சம் மதிப்புள்ள போதை மருந்து என்று மணிக்கு தெரிய வருகிறது. கோபம் அடைந்த முதலாளி மணியின் காதலி ரேகாவை கடத்தி வைத்துக் கொண்டு, மணியிடம் 50 லட்சம் மதிப்புள்ள அந்த பார்சலை கொண்டு வந்து கொடு அல்லது அதற்கு சமமான பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டுகிறார். தனது நண்பர் ரமேஷ் திலக்குடன் பல வகையிலும் பணத்திற்கு முயற்சி செய்கிறார் மணி. இதற்கிடையில், தொழில் அதிபர் அசோக் (ஸ்ரீகாந்த்) அவரது மனைவி அர்ச்சனாவை அவரது முன்னாள் காதலன் லிங்கா அர்ச்சனாவுடன் இருக்கும் நெருக்கமான படங்களை வைத்து இரண்டு கோடிப் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறார். தொழில் அதிபர் அசோக் மனைவி அர்ச்சனா மற்றும் மகள் அனு ஆகியோர் மலைபாதையில் போகும் போது, எதிர்பாராத ஒரு தகராறில் அவரது மகள் அனு ஒரு அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்படுகிறார்.

தனது காதலியை காப்பாற்ற பணத்தை எப்படி புரட்டுவது என்று தெரியாமல் அலையும் மணியும் அவரது நண்பன் ரமேஷ் திலக்கும் இந்த குழந்தை கடத்தல் விஷயத்தில் சிக்குகிறார்கள். ஆனால், அந்த குழந்தையை வேறு யாரோ கடத்த இப்படியாக அந்த சிறுமி ஒவ்வொரு சந்தர்ப்பச் சூழலில் மாறி மாறி கடத்தப்படுகிறார். கடைசியில் குழந்தைக்கு என்ன ஆனது? உண்மையான வில்லன் யார்? மணி தன் காதலியை எப்படி காப்பாற்றினார்? அர்ச்சனா முன்னாள் காதலன் மிரட்டலில் இருந்து எப்படி விடுபட்டார்? என்பது படத்தின் மீதிக்கதை.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme