Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

Posted on August 23, 2025

ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த ‘பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே ‘பருத்திவீரன்’ சரவணன் என்றானது. அதன் பிறகு
ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார். எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார்.

அண்மையில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார்.

நடிகர் சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டி இருக்கிறார் .
தனது தோட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விநாயகராக அதை வணங்கி வந்தவர், தற்போது அதற்காக ஓர் ஆலயம் கட்டி இருக்கிறார்.

அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த ஆலயத்தின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
வருகிற 27.0 8 .2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

ஆலய கும்பாபிஷேகம் நடக்கும் அதே நாளில் சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்கிற பெயரில் படப்பிடிப்பு தளம் ஒரு ஸ்டுடியோவையும் அன்று தொடங்குகிறார். அதன் திறப்பு விழாவில் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் கலந்து கொண்டு ஸ்டுடியோவைத் திறந்து வைக்கிறார்.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme