Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

‘இந்தியன் 2’ திரை விமர்சனம்

Posted on July 12, 2024
‘இந்தியன் 2’ திரை விமர்சனம்
‘இந்தியன் 2’ திரை விமர்சனம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஜெகன், நெடுமுடி வேணு ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இந்தியன் 2’

சென்னையில் அரவிந்தன் (சித்தார்த்) மற்றும் அவரது நண்பர்கள் பிரியா பவானி ஷங்கர், ஜெகன் உடன் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தன் நண்பர்களுடன் ‘பார்க்கிங் டாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து சமூக பிரச்சினைகளுக்காக, குறிப்பாக ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார் அரவிந்தன் (சித்தார்த்).இந்நிலையில் அரசு வேலைக்கு லஞ்சம் கேட்டதால் ஒரு பெண் தற்கொலை செய்து இறந்து விடுகிறார் இதை நேரில் பார்க்கும் சித்தார்த் நியாயம் கேட்டு போராடுகிறார் . இதனால் சிறைக்கு செல்ல சித்தார்தின் காதலி ரகுல் ப்ரித் சிங் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருகிறார் ஒரு கட்டத்தில் ஊழலை ஒழிக்க இந்தியன் தாத்தா வர வேண்டும் என நினைக்கிறார் சித்தார்த் ‘ஒரு சூழலில் இந்தியன் தாத்தா உயிருடன் இருக்கிறார் என்று தகவல் கிடைக்க சந்தோஷம் அடைகிறார் ‘இந்தியன்’ தாத்தா (கமல்ஹாசன்) வரவழைக்க #ComeBackINDIAN என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்கிறார் அரவிந்தன் (சித்தார்த்).

சேனாபதி ‘இந்தியன்’ தாத்தா (கமல்ஹாசன்) தைவான் நாட்டில் வர்மக் கலையை பயிற்றுவிக்கும் குருவாக சேனாபதி திகைக்கிறார் ,மற்றும் ஊழலை தடுக்க தைவானில் இருக்கும் சேனாபதி மீண்டும் இந்தியா செல்ல வேண்டும் என முடிவு செய்கிறார்,இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க சேனாபதி சென்றால் ஊயல்வாதிகளின் நிலை என்னவாகும் என்பதை திரையில் பிரமாண்டமாக ரசிக்கும்படியாக உள்ளது.

தைவானில் இருந்து 28 ஆண்டுகள் கழித்து இந்திய வரும் வீரசேகரன் சேனாபதியை பிடிக்க வேண்டும் என தமிழாக போலீஸ் ஒரு புறம் காத்திருக்க ‘இந்தியன்’ தாத்தா போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தொடர்ந்து ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் உயல்வாதிகளை கொலை செய்கிறார் சேனாபதி . மற்றும் சிபிஐ அதிகாரியான பாபி சிம்ஹா தலைமையிலான போலீஸ் தனி படை அமைத்து சேனாபதியை துரத்துகிறது. இறுதியில் போலீஸால் இந்தியன் தாத்தாவை பிடிக்க முடிந்ததா? இந்தியன் தாத்தா ஊழலை ஒழித்தாரா?,இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க சேனாபதி சென்றால் ஊயல்வாதிகளின் நிலை என்னவாகும் இது போன்ற கேள்விக்கு பதில் தான் இந்த ‘இந்தியன் 2’ திரைக்கதை.

இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் அனைத்து மேக்கப்பின் மூலம் கமலின் நடிப்பை உணரமுடியவில்லை கெரிக்ட்ராகவே வாய்ந்துள்ளார் . அவரது மேக்கப் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு ,ரகுல் ப்ரீத் சிங் நடிப்பு திரையில் சிறப்பு , எஸ்.ஜே.சூர்யா ‘இந்தியன் 2’ வில்லனாக சிறிது நேரம் வில்லன் தோன்றுகிறார் இந்தியன் 3’ அவர் நடிப்பை சிறப்பாக ரசிக்க ரசிகர்கள் காத்துள்ளனர்.
அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக சிறப்பு . ரவிவர்மன் ஒளிப்பதிவு திரையில் ரசிக்கும் படி இருந்தது . முத்துராஜ் கலை இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme