Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

‘கருடன்’ திரை விமர்சனம்

Posted on June 1, 2024

'கருடன்' திரை விமர்சனம்
‘கருடன்’ திரை விமர்சனம்

கருடன் திரை கதை தொடக்கத்தில் கர்ணா(உன்னி முகுந்தன்) அதே பகுதியை சேர்ந்த கர்ணாவின் உயிர் நண்பன் ஆதி(சசிகுமார்) மற்றும் அனாதை சூரி (சொக்கன்) இவர்களை வடிவுக்கரசி அரவணைத்து வளர்த்து வருகிறார் இவர்கள் அனைவரும் சந்தோசமாக தேனி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

உன்னி முகுந்தன் சிறு வயதில் விளையாடும் பொது நண்பர்களால் நாயை விட்டு கடிக்க செய்கின்றனர் நண்பர்கள் அப்போது அங்குல சூரி நாயிடம் இருந்து கர்ணா(உன்னி முகுந்தன்) காப்பாற்றுகிறார் அன்றுமுதல் தனக்கு சோறு போட்டு வளர்த்த நண்பன் கர்ணா(உன்னி முகுந்தன்) உடன் இருக்க, அவருக்கு ஒன்று என்றால் உயிரையே கொடுக்கும் அளவிற்கு இருக்கிறார் சூரி (சொக்கன்) .

இந்த ஊரில் கோம்பை என்னும் அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் தலைவராக வடிவுக்கரசி இருக்கிறார். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் ஒன்று சென்னையில் இருக்கிறது. இதை அபகரிக்க முயற்சி செய்கிறார் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார்.

கோம்பை கோவிலில், நிலத்திற்கு சொந்தமான பட்டைய பத்திரம் தேவைப்படுகிறது அதை எடுக்க திட்டம் போடுகிறார் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார். இதற்காக தியேட்டர்காரனாக வரும் லோக்கலில் உள்ள Mime கோபியை அணுகுகிறார். ஆனால் வாழையடி வாழையாக, அந்தக் கோவில் பட்டயம் நகைகள் எல்லாத்தையும், வடிவுக்கரசி தான் பாதுகாத்து வருகிறார்.

கோம்பை கோவிலில் நிலத்திற்கு சொந்தமான பட்டைய பத்திரம் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தேவை பட . இதற்கு தடையாக சசிகுமார் செயல்படுகிறார்.சசிகுமாரின் நண்பரான உன்னி முகுந்தனை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தன் பக்கம் கொண்டுவந்து ஆவணத்தை எடுக்க நினைக்கிறார் இறுதியில் அமைச்சரின் திட்டம் நிறைவேறியதா? சசிகுமார், உன்னி முகுந்தன் நட்பு என்ன ஆனது? சூரி யாருக்கு சாதகமாக செயல்பட்டார்? இந்த கேள்வி கெல்லாம் பதில் தன் கருடன் திரைப்படம்.

திரைக்கதையில் மூன்று நாயகன் என்றாலும் இறுதியில் கதையின் நாயகனாக நயத்தின் பக்கம் நின்று சூரி திரையில் ஜொலிக்கிறார்.

அமைச்சர் ஆர் வி உதயகுமார், போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி, தியேட்டர்காரர் மைம் கோபி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.சூரியின் காதலியும் சரி மற்றும் நடிப்பை கொடுத்திருக்கிறார், சிவேதா சசிகுமாரை நினைத்து உருகும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

சசிகுமார் வழக்கமான நடிப்பில் இருந்து மாறுபட்டு இருக்கிறார். மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தன்னுடைய எதார்த்த நடிப்பில் இருந்து ஒரு படி மேலே சென்று நடித்திருக்கிறார். அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, அவர் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

இறுதியில் இயக்குனர் வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவரில், ” அதிகமாக ஆசைப்படும் ஒருவன் தவறான வழியில் செல்லும்போது இயற்கையும் கடவுளும் அவர்களை திருத்தம் முற்ப்படும் ” என்று கூறும் வசனம் அற்புதம்.

யுவனின் பின்னணி இசை படத்தில் மற்றொரு கதாநாயகன்.

ஆர்த்துர் வில்சனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை புழுதி பறக்க படம் பிடித்து இருக்கிறார்.

லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் கருடன் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

'கருடன்' திரை விமர்சனம்
‘கருடன்’ திரை விமர்சனம்

  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme