Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
மறக்குமா நெஞ்சம் திரை விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் திரை விமர்சனம்

Posted on February 2, 2024

மறக்குமா நெஞ்சம் திரை விமர்சனம்
மறக்குமா நெஞ்சம் திரை விமர்சனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி 2008ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய கார்த்திக் (ரக்ஷன்), பிரியதர்ஷினி (மலினா), தீனா (சலீம்), ராகுல் (கௌதம்) மற்றும் அவர்களுடன் படித்த பள்ளி மாணவர்கள் அனைவரும் நல்ல வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்கள். 2008ம் ஆண்டு எழுதிய தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது அந்த தேர்வு செல்லாது அதனால் அந்த மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என 2018-ல் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த தீர்ப்பு மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் போது கார்த்திக் மட்டும் சந்தோஷமாக இருக்கிறான். அதற்கு காரணம் பள்ளியில் படித்தபோது கார்த்திக்கிற்கு பிரியதர்ஷினி மீது காதல் மலர்கிறது, ஆனால் காதலை சொல்லாமல் விடுகிறான். இருப்பினும் இன்று வரை பிரியதர்ஷினியையே நினைத்துக் கொண்டிருக்கிறான். மூன்று மாதத்தில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வேலை, வீடு எல்லாத்தையும் விட்டு விட்டு பள்ளிக்கு திரும்புகிறார்கள். இந்த அரிய சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக தன்னுடைய காதலை பிரியதர்ஷினியிடம் சொல்லிவிட வேண்டும் என முடிவு செய்கிறான் கார்த்திக். இந்த மூன்று மாத காலத்தில் நடக்கும் விஷயங்கள் நடுவில் பிரியதர்ஷினியிடம் கார்த்திக் காதலை சொன்னாரா? என்பதே படத்தின் மறக்குமா நெஞ்சம் திரை கதை.

கார்த்தியாக ரக்ஷன், பிரியதர்ஷினியாக மலினா அதுல், சரணாவாக ஸ்வேதா வேணுகோபால், கௌதமாக ராகுல் சின்ஹா, மூர்த்தி அனைவரும் பள்ளிப் பருவத்தில் ஏற்படும் இளமை துடிப்புகள் முடிந்தவரை சிறப்பான நடிப்பின் மூலம் நம் வாழ்வில் பள்ளிப் பருவம் என்பது என்றுமே மறக்க முடியாத ஒன்று. அந்த பள்ளி பருவ வாழ்க்கை நினைவுகளை கதை களமாக தேர்வு செய்த இயக்குனர் ராகோ.யோகேந்திரன் திரைக்கதை சுவாரஸ்யமாக சிறப்பாக காட்சி படுத்தி 90ஸ் கிட்ஸ்கள் அவர்கள் தங்கள் பள்ளி பருவ நினைவுகளுக்குள் மீண்டும் ஒரு முறை அழைத்துச் செல்ல இயக்குனர் ராகோ.யோகேந்திரன் எடுத்த முயற்சியை பாராட்டலாம்..

மேலும் ராகவ் (முத்தழகன்), டென்னிஸ் (ஜோசப்பாக மெல்வின்), முனிஷ்காந்த் கார்த்திகேயனாக (PT மாஸ்டர்), அர்ஜுனாக அருண் குரியன், ஜெனிபராக அகிலா (கணித ஆசிரியர்), லிண்டோஷாவாக ஆஷிகா காதர், நடாலி லூர்ட்ஸ் ஷில்பாவாக, யோகியாக விஷ்வத் திரைக்கதையை “சலீமாக வரும் தீனா மட்டும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்”.
ஒளிப்பதிவாளர் – கோபி துரைசாமி, இசை – சச்சின் வாரியர், படத்தொகுப்பாளர்கள் – பாலமுரளி, ஷஷாங்க் மாலி, கலை இயக்குனர் – பிரேம் கருந்தமலை ஆகியோர் தங்களின் திறமையை சிறப்பாக திரையில் கொடுத்துள்ளார் .

  • Kauvery Hospital Strengthens Emergency Cardiac Response at Chennai International Airport with Installation of Automated External Defibrillators (AED)
  • சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவிகளை நிறுவி அவசரகால இதய சிகிச்சையை வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனை!*
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  
  • “வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme