Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ப்ளூ ஸ்டார் திரை விமர்சனம்-indiastarsnow.com

ப்ளூ ஸ்டார் திரை விமர்சனம்

Posted on January 28, 2024

ப்ளூ ஸ்டார் திரை விமர்சனம்-indiastarsnow.com
ப்ளூ ஸ்டார் திரை விமர்சனம்-indiastarsnow.com
சென்னை அடுத்துள்ள அரக்கோணத்தை மையமாக வைத்து ஒரு சிறப்பான கிராமத்து ஜாதி திரைக்கதை – வசனத்தை அமைத்துள்ளார் இயக்குனர் தமிழ்ப்பிரபா ,ப்ளூ ஸ்டார் திரை கதையில் இரண்டு உள்ளூர் கிரிக்கெட் அணிகள் இரண்டு இளைஞர் தலைமையில் ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. அவர்களில் ஒரு குழு தலித் வீரர்கள் அணி ரஞ்சித் (அசோக் செல்வன்) வழிநடத்துகிறார். ரஞ்சித்தின் அணியில் அவரது சகோதரர் சாம் (பிருத்விராஜன்) இணைந்து விளையாடுகிறார் , (குமரவேல்) விளையாட்டில் தனது திறமையை நிலைநிறுத்தி ஒரு நல்ல வேலையில் தன்னுடைய மகன்கள் இறங்க வேண்டும் என விரும்புகிறார். அதே சமயம் ராஜேஷ் தலைமையில் ஆல்பா பாய்ஸ் ஊர் தெரு பசங்க (ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமப் பகுதி மக்கள்) உள்ளனர். ஒரு காலத்தில் ப்ளூ ஸ்டார் அணிக்காக இம்மானுவேல் (பகவதி பெருமாள்) மிக சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். அவர் ஆடும் போதெல்லாம் புளூ ஸ்டார் அணி எப்போதும் ஆல்பா பாய்ஸ் அணியை தோற்கடிக்கும். ஒரு போட்டியில் ஆல்பா பாய்ஸ் அணி தகராறில் ஈடுபட்டு இம்மானுவேலை காயப்படுத்தி விடுகிறார்கள். அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த கிராமத்தில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது என காவல் துறை முடிவு செய்து அமல்படுத்துகிறது. இப்போது MCH பேஸ் அகாடமியில் இந்த மைதானத்தில் புல் வெட்டி அழகுபடுத்தும் மனிதராக வேலை செய்து கொண்டு இருக்கிறார் இம்மானுவேல்.

மைதானத்தில் யார் முதலில் விளையாட வேண்டும் என்ற சண்டை அடிக்கடி நடக்கிறது. அதற்கு இரு அணிகளும் மீண்டும் போட்டியை நடத்த முடிவு செய்கிறார்கள். ராஜேஷ் தலைமையில் ஆல்பா பாய்ஸ் “எம்சிஎஃப்” கிரிக்கெட் கிளப்பில் உள்ள சில தொழில்முறை கிரிக்கெட் வீரர்களை பணம் கொடுத்து தங்களது அணிக்காக விளையாட வைக்கிறார்கள். போட்டியின் போது ஆல்பா பாய்ஸ் அணியை இந்த “எம்சிஎஃப்” கிரிக்கெட் கிளப் வீரர்கள் அலட்சியப்படுத்தியும், அவமானப்படுத்தவும் செய்கிறார்கள். அதே நேரத்தில் ப்ளூ ஸ்டார் அணியை தோற்கடி க்கவும் செய்கிறார்கள். தோல்வியை தழுவிய ரஞ்சித் எப்படியாவது மீண்டும் ப்ளூ ஸ்டார் அணியை ஆல்பா பாய்ஸ் அணியுடன் விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பதே அவரது கனவு. இந்நிலையில் MCH பேஸ் அகாடமியில் பயிற்சியில் இருக்கும் “எம்சிஎஃப்” கிரிக்கெட் கிளப்பில் உள்ள வீரர்களுக்கு மீதி பணம் கொடுக்க செல்லும் ராஜேஷ் மோசமாக நடத்தப்பட்டு அவமானம் படுத்தப்படுகிறார். அதை கவனித்த ரஞ்சித் MCH பேஸ் அகாடமி பயிற்சியாளருடன் மோதுகிறார். அதன் பின் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆல்பா பாய்ஸ் ஒரே அணியாக ஒன்றிணைந்து தங்களை நிரூபிப்பதற்காக பெரிய போட்டியில் MCH பேஸ் அகாடமி அணியை எப்படி தோற்கடிக்கிறது என்பதுதான் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் சுவரஸ்யமான திரை கதை.

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், மற்றும் பிருத்விராஜன் மூவரும் நிஜ வாழ்க்கையில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்பதல் அவர்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

ப்ளூ ஸ்டார் திரை விமர்சனம்-indiastarsnow.com
ப்ளூ ஸ்டார் திரை விமர்சனம்-indiastarsnow.com

ஆனந்தி கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வன் காதலியாக மட்டும் இல்லாமல் அவரின் “மைனஸ் மற்றும் பிளஸ் ” என்னவென்று வெளிப்படுத்தும் விதம் படத்திற்கு பக்க பலம் . ஆனால் கீர்த்தி பாண்டியன் ஒரு கட்டத்திற்குப் பிறகு காணாமல் போகிறது கொஞ்சம் வருத்தமே.இம்மானுவேல் கதாபாத்திரத்தில் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உடல் மொழியிலும் அ நேர்த்தியாக வெளிப்படுத்தி தன்னுடைய கதாபாத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதே போல குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, டி.என்.அருண் பாலாஜி, திவ்யா துரைசாமி, சஜு நவோதயா உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் உமாதேவி மற்றும் அறிவின் வரிகளில் பாடல்கள் அற்புதம் மற்றும் பின்னணி இசையும் கிரிக்கெட் போட்டி காட்சிகள் பரபரப்பாக பார்வையாளர்களை திரையில் ரசிக்கவைத்துள்ளது ..

கலை இயக்குனர் எல்.ஜெய ரகுவின் உழைப்பை, சிறப்பான காட்சி கோணங்கள் மூலம் தமிழ் ஏ அழகனின் ஒளிப்பதிவு பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பாளர் செல்வா சுமு எடிட்டிங் கடைசி வரை பார்வையாளர்களை திரையில் ரசிக்கவைத்துள்ளது .

  • மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
  • ராமாயணா திரை விமர்சனம்
  • VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS OF MOOKUTHI AMMAN 2
  • மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!
  • Mythri Movie Makers – G Squad presentFilmmaker Vishal Venkat’s Directorial, Starring Regena Cassandra and Nassar, Wraps Up Shooting
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme