Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வட்டார வழக்கு திரை விமர்சனம்-indiastarsnow.com

வட்டார வழக்கு திரை விமர்சனம்

Posted on December 30, 2023

மதுரை மாவட்டத்தில் உள்ள தோடனேரி கிராமத்தில் 1980 தில் கதைக்களம் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது ’வட்டார வழக்கு’ திரைப்படம் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பகையுணர்வு பல உயிர்களைப் பலி வாங்குகிறது. இப்பகைக்கு இடையில் மலரும் சேங்கை (சந்தோஷ் நம்பிராஜன்) மற்றும் (ரவீனா ரவி) காதல் என்ன ஆனது என்பதை ரத்தமும் சதையுமாகப் பேச முயன்றிருக்கிறது அறிமுக இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரனின் `வட்டார வழக்கு’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பீராஜன், மிக இயல்பாக நடித்திருப்பதோடு, கடும்கோபம் மற்றும் காதலை மிக இயல்பாக கடத்தும் விதத்தில் அசத்துகிறார். நாயகியாக நடித்திருக்கும் ரவீனா ரவி தொட்டச்சி என்ற வேடத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

ரவீனா ரவி கிராமத்துப் பெண்ணாக திரையில் சிறப்பாக நடித்துள்ளார் குறிப்பாக நடிப்பில் நிதானம், தைரியம், காதல், கோபம், வேதனை என எல்லா உணர்வுகளையும் நேர்த்தியாகப் திரையில் கிராமத்து பெண்ணாகவே ரசிக்கவைத்துள்ளார் ரவீனா .

`வட்டார வழக்கு’ திரைப்படம் கிராமத்து பின்ணணி என்பதால் இதில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலானவர்கள், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுடைய நடிப்பு செயற்கைத்தனம் அற்ற வாழ்வியலாக இருப்பதோடு, படத்தின் தனி சிறப்பாகவும் உள்ளது .

இளையராஜாவின் இசையில் காதல் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. ராஜாவின் பின்னணி படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது. `வட்டார வழக்கு’ திரைப்படம் 1980 தில் கதை நடப்பதால், அப்போதைய இளையராஜாவின் பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது திரையில் ரசிக்கவைக்கிறது இசை.

ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன் மற்றும் டோனி சான் மண்ணின் மனதையும் அங்குல மனிதர்களின் உணர்வையும் சிறப்பாக திரையில் ரசிக்கும் படி படமாக்கியிருக்கிறார்.

இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரனின் மண்ணின் காதல் மற்றும் மோதலை மையப்படுத்தி நகரும் கதையில் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் மக்களின் வாழ்வியலை சொல்லும் எதார்த்த படைப்பாக திரையில் ரசிக்கவைக்கிறது .

  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • Passion Studios & KVN Productions present Debut filmmaker Ashok’s Directorial *Director Shankar’s son Arjith Shankar debut movie titled “Lover Boy” launched!
  • பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்
  • T Gopichand, Sankalp Reddy, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen, Presented By Pavan Kumar- Historical Film “Bharthavarsha”
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme