Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
மூத்தகுடி திரை விமர்சனம்

மூத்தகுடி திரை விமர்சனம்

Posted on December 29, 2023

மூத்தகுடி கிராமத்தில் பெரிய குடும்பத்து பெண்(மூக்கம்மா) கே.ஆர்.விஜயா சொல்லுக்கு ஊர் பொதுமக்கள் கட்டுப்பட்டு நடக்கின்றனர் . கே.ஆர்.விஜயா (மூக்கம்மா) குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் லாரியில் குலதெய்வ கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள் பாதி வழியில் கே.ஆர்.விஜயாவின் உறவினர் மற்றும் லாரி ஓட்டுநர் லாரி பாத்தாகிவிட்டது என்று சொல்லி இருவரும் சேர்ந்து சாராயம் குடிக்க செல்கிறார்கள் போதையில் அவர்கள் சாராயம் பற்றி தவறாக பேச அங்குல ஊர் குடிகாரர்கள் அவர்களை அடிக்க துரத்துகிறாரார்கள் அப்போது அவர்கள் தப்பிக்க லாரி வேகமாக ஓடிச்செல்ல விபத்துக்குள்ளாகி லாரி எரிந்து அதில் இருந்தவர்கள் உயிரிழந்து விடுகிறார்கள். கே.ஆர்.விஜயா, அவருடைய தம்பி யார் கண்ணன் மற்றும் கே.ஆர்.விஜயா (மூக்கம்மா) பேரக் குழந்தைகள் ஒதுக்குபுறமாக சீறுநீர் காய்க் இறங்குகிறார்கள் ஆகையால் அந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.

பலபேர் உயிரை குடித்த சாராயத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் கே.ஆர்.விஜயா,(மூக்கம்மா) தனது ஊரில் யாரும் மது குடிக்க கூடாது, அப்படி குடித்தால் அவர்கள் ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படுவார்கள், என்று கட்டுப்பாடு போடுகிறார். அவருடைய கட்டுப்பாடுபடி மூத்தகுடி மக்கள் மது குடிக்காமல் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருவதோடு, அந்த ஊரில் சாராயம் விற்க விடாமலும் தடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, தொழிலதிபர் ராஜ்கபூர், மூத்தகுடியில் சாராய தொழிற்சாலை கட்டி, அந்த ஊர் மக்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

நாயகி அன்விஷாவை (முறைப்பெண்) தருண் கோபிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கே.ஆர்.விஜயா பேசி வந்ததால், தருண் கோபி அன்விஷாவை தீயாக காதலித்து வருகிறார். ஆனால், அன்விஷாவுக்கு தருண் கோபியின் தம்பி பிரகாஷ் சந்திரா மீது காதல் மலர்கிறது. இந்த காதல் பிரச்சனை மூத்தகுடி பெரிய குடும்பத்திற்கு மட்டும் இன்றி, அவர்களால் போடப்பட்ட கட்டுப்பாட்டிற்கே களங்கம் எடுக்கிறது. இறுதியில், அந்த களங்கத்தை மூத்தகுடி குடும்பம் எப்படி சரிசெய்தது என்பதே மூத்தகுடி படத்தின் மீதிக்கதை.

மது பழக்கத்தினால் மக்கள் எப்படி சீரழிந்து போகிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட மதுவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதையும் பேசும் சமூக அக்கறைக்கொண்ட கதையாக இருந்தாலும், அதற்கு திரைக்கதை அமைத்த விதம் அலங்கோலமாக இருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் தருண் கோபி, உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைக்கிறார் மற்றும் அவரின் ஆக்ரோஷமான நடிப்பு திரையில் சிறப்பு ,தருண் கோபியின் தம்பியாக நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா தன்னை விருப்பும் பெண்ணை அண்ணன் விருப்புவதை தெரிந்தும் தடுமாறுகிறார் அந்த நடிப்பு திரையில் மிக சிறப்பு , நாயகியாக நடித்திருக்கும் அன்விஷாவின் நடிப்பும் திரையில் மிக சிறப்பு .

ஆர்.சுந்தரராஜன் – சிங்கம் புலி காமெடி ட்ராக் அருமை . ராஜ்கபூர் வழக்கமான வில்லத்தனத்தை சரியாக செய்திருக்கிறார்.கந்தா ரவிசந்திரனின் ஒளிப்பதிவும், ஜே.ஆர்.முருகானந்தத்தின் இசையும் படத்திற்கு பக்கபலம் .

சமூகத்திற்கு தேவையான கதையை திரைக்கதையாகி அதனுடன் காதல் மற்றும் கமர்ஷியல் சண்டை படமாக கொடுத்து மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை இயக்குநர் ரவி பார்கவன், தான் சொல்ல வந்த நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் .

  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • Passion Studios & KVN Productions present Debut filmmaker Ashok’s Directorial *Director Shankar’s son Arjith Shankar debut movie titled “Lover Boy” launched!
  • பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்
  • T Gopichand, Sankalp Reddy, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen, Presented By Pavan Kumar- Historical Film “Bharthavarsha”
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme