நந்திவர்மன் திரை விமர்சனம்-indiastarsnow.com
செஞ்சி அருகில் உள்ள அனுமந்தபுரம் என்ற கிராமத்தை பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆட்சியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுமந்தபுரம் கிராமம் செல்வ செழிப்புடன் வளமாக இருந்து வருகிறது. இதனை அறிந்து கொண்ட கோரா என்ற கொள்ளையன் அந்த கிராமத்தை அழித்து அனுமந்தீஸ்வரர் கோவிலுக்குள் உள்ள தங்கப் புதையலை அடைய நினைக்கிறார், ஆனால் பல்லவ மன்னன் நந்திவர்மன் கோராவின் சுசியை தோற்கடித்து போரில் நந்திவர்மனும் இறந்து விடுகிறார்.
போஸ் வெங்கட் தலைமையில் அகழ்வாராய்ச்சி குழு இந்த கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த ஊருக்கு வருகின்றனர். இதன் பின்பு அந்த ஊரில் உயிர்சேதம் மற்றும் அமனுஷியாக்கள் நடக்கிறது. இறுதியில் தங்கப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா? அந்த ஊரில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு யார் காரணம் என்பதே நந்திவர்மன் திரை கதை .
நந்திவர்மன் படத்தில் ஹீரோவாக சுரேஷ் ரவி (குரு வர்மன்) என்ற கதாபாத்திரத்தில் எஸ்ஐ காண கம்பீரமான உடல் அமைப்புடன் அவரது நடிப்பு திரையில் ரசிக்குப்படியாகி உள்ளது . போஸ் வெங்கட் தலைமையில் அனுமந்தபுரத்தில் அதை கோவிலை பற்றி நடக்கும் ஆரம்பகட்ட அகழ்வாராய்ச்சிகள் சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளது, செஞ்சி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை படமாக்கப்பட்ட விதம் படத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. நடிப்பின் மூலம் ஆச வெங்கடேஷ், நிழல்கள் ரவி, ஊர் தலைவராக வரும் கஜராஜ், குடிகாரராக வரும் முல்லை கோதண்டம் ஆகியோர் கதைக்கு உயிர்கொடுக்கும் விதமாக நடிப்பு அமைந்துள்ளது .
பெலிக்ஸ் இசையில் பின்னணி இசை ரசிக்கும் படி இருந்தது, . செயோன் முத்துவின் ஒளிப்பதிவு மற்றும் சான் லோகேஸின் எடிட்டிங் படத்திற்கு சுவாரசியமாக இருந்தது.
அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில் பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி நடித்திருக்கும் படம் நந்திவர்மன். இந்த படத்தில் ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் நடித்துள்ளனர். பெலிக்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்க, சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். கிரைம் மற்றும் மிஸ்டரி திரில்லர் வடிவில் படம் உருவாகியுள்ளது.