Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • மூன்றாம் மனிதன்’ – திரை விமர்சனம்

மூன்றாம் மனிதன்’ – திரை விமர்சனம்

admin December 29, 2023
மூன்றாம் மனிதன்' - திரை விமர்சனம்

மூன்றாம் மனிதன்' - திரை விமர்சனம்

மூன்றாம் மனிதன் திரைப்படத்தின் இயக்குநர் ராம்தேவ் கதை, வசனம், எழுதி, இயக்கி தயாரித்துள்ளார் . இதில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஸ்ரீநாத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மூன்றாம் மனிதன்’ திரைப்படம் இது கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் திரையில் ரசிக்கும் படி இருந்தது. இந்த படத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரணா, ஶ்ரீ நாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராம்தேவ் இயக்கத்தில் ‘மூன்றாம் மனிதன்’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமாகிறார் “பிரணா” . படம் இன்று வெளிவருகிறது முதல் படத்திலேயே 8 வயது மகனுக்கு தாயாக திரையில் நடித்து அனைவரின் கவனத்தையும் திரையில் தன் பக்கம் ஈர்த்துள்ளார் “பிரணா”.

காவல் அதிகாரியான கந்தராஜ் என்பவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பார். அதனை விசாரிக்க வருகிறார் பாக்யராஜ், அப்படி அவர் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் விஷயங்கள் கிடைக்கிறது.

கந்தராஜ்- ன் மனைவிக்கு கௌதம் என்பருடன் பழக்கம் இருப்பது கந்தராஜுக்கு தெரிய வருகிறது. கௌதமை எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, கந்தராஜுக்கு வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு ஏற்படுகிறது. குடிகார கணவன் குடியினால் அவனை சுற்றியுள்ளவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை இந்த திரைக்கதை மூலம் சிறப்பாக திரையில் புரியும்படி சொல்லியுள்ளார் இயக்குனர் ராம்தேவ் . சமுதாயத்தில் அனைவரும் பார்க்கவேண்டிய படம் மூன்றாம் மனிதன்’ திரைப்படம் படத்தின் முதன்மை கதாபாத்திரமாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் சோனியா அகர்வாலின் கணவரை கடத்தி விட இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை பலவித சஸ்பென்ஸ்களுடன் சொல்லி இருக்கும் படம் தான் மூன்றாம் மனிதன்.

இவர்களை தவிர பிரணா மற்றும் ஶ்ரீ நாத் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளனர். மேலும் பிரணாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வித்தியாசமாவும் இருந்தது. அதனை அவர் சிறப்பாகவே பண்ணி இருந்தார். சிறிய பட்ஜெட்டில் படம் உருவாகி இருந்தாலும் கதை மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு தேவையான ஒரு கருத்தை, கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இயக்குநர் ராம்தேவ் சிறப்பாக சொல்லியிருக்கிறார். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் சிறப்பாக இருந்தது. கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விழிப்புணர்வு விருந்தாக இருக்கும்.

Post navigation

Previous Rajkumar Hirani’s Dunki spreading love all over the box office! Crosses the 150 Cr. mark in India and the 300 Cr. mark globally in just 7 days for a single language film
Next நந்திவர்மன் திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 
  • News

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 

April 17, 2026
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026
Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 
  • News

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 

April 16, 2026
*Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu’s next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*
  • News

*Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu’s next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*

April 16, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.