Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வாழ்வு தொடங்குமிடம் நீ தானே திரை விமர்சனம்-indiastarsnow.com

வாழ்வு தொடங்குமிடம் நீ தானே திரை விமர்சனம்

Posted on September 27, 2023

தயாரிப்பாளர் : நீலிமா இசை.

ரிலீஸ் : ஷாட் ஃப்ளிக்ஸ் ஓடிடி.

டைரக்டர் : ஜெயராஜ் பழனி,

திரைக்கதை வசனம் : சதீஷ் சிவா& ஜெயராஜ் பழனி.

ஆர்ட்டிஸ்ட்ஸ் : நிரஞ்சனா நெய்தியார், சுருதி பெரியசாமி, அர்ஷத், தஸ்மிகா, ஆறுமுக வேல், ஆர்.ஜே.பிரதீப், சுதா.

டெக்னீஷியன்கள் : ஒளிப்பதிவு : கோகுல கிருஷ்ணன்,

இசை : தர்ஷன் குமார், எடிட்டர் : விக்னேஷ்

பிஆர்ஓ : யுவராஜ்
ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’

திரைக்கதையின் நாயகன் இர்ஃபான் (அஷ்ரத் ஃபெரோஸ்)
என தொடங்கும் திரைக்கதையின் தனது பள்ளிப்பருவத் தோழியான ஷக்கீராவே (நிரஞ்சனா நெய்தியார்)தனக்கு மனைவியாக வரப் போவதை நினைத்து உற்சாகமாகிறார் இர்ஃபான் (அஷ்ரத் ஃபெரோஸ்). நிச்சயதார்த்தம் நடந்து, நிக்காஹ் ஏற்பாடுகளும் நடக்கிறது. நிக்காஹ் முதல் நாள் இரவு மெஹந்தி வைக்கும் நிகச்சியும் நடக்கிறது.

இர்ஃபான் தனக்கு மனைவியாகப்போகும் ஷக்கீரா
தரங்கம்பாடியில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தி செல்கிறார் அப்போது ஷக்கீரா தான் வினோதாவை காதலிப்பதாகவும் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குமாறும் இர்ஃபானிடமே உதவி கேட்கிறார் ஷக்கீரா. அந்த வினோதா ஒரு பெண் என தெரிந்ததும் இருவரையும் சேர்த்து வைக்க களம் இறங்குவது தான் ஓப்பனிங் சீன். கதை தரங்கம்பாடியில் ஆரம்பித்து திருச்சி என தொடர்ந்து தரங்கம்பாடியில் முடிகிறது.

வினோதா (வினோ)ஆவணப் படம் எடுக்க தரங்கம்பாடிக்கு வரும் வினோதாவாக (சுருதி பெரியசாமி) திரையில் சிறப்பாக நடித்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த கிரமாத்து பெண்ணான நிரஞ்சனா நெய்தியாரும், நகரத்தில் வாழும் ஆவணப்பட பெண் இயக்குநரான ஸ்ருதி பெரியசாமியும் சில நாட்கள் ஒரே வீட்டில் தங்கும் போது, இவர்களிடையே காதல் உருவாகிறது. இதை தெரிந்துக் கொண்ட நிரஞ்சனா நெய்தியாரின் தந்தை அவருக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார்.தங்களுக்கு இடையிலான உறவும் காதல் தான் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.

ஷக்கீரா முஸ்லீம் பெண்ணாக திரைக்கதை அமைத்த இயக்குனர் ஜெயராஜ் பழனி இந்த வினோதா(சுருதி பெரியசாமி) எந்த மதம் என்பதைக் சொல்லாமல் போனது எனோ கேள்விக்குறியாகவுள்ளது ?. (இரண்டம் பாலினத்தினார்) தன் பாலினத்தவர்கள் மீது ஏற்படும் காதலும் இயற்கையானது தான், எனவே அதை இந்த சமூகம் மற்றும் (குடும்பத்தினர் )ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை திரையில்
சிறப்பாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயராஜ் பழனி,

இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர், கடற்கரை மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme