Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
டீமான் திரை விமர்சனம்

‘டீமான்’ திரை விமர்சனம்

Posted on September 23, 2023

Casting : Sachin, Abarnathi, Kumki Aswin, Suruthi Periyasamy, KPY Prabakaran, Raveena Daha, Navya suji, Navya Tharani, Abishek

Directed By : Ramesh Pazhanivel

Music By : Ronnie Raphael

Produced By : R.Somasundaram

டீமான் படத்தின் திரைக்கதை டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரு வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து டீமான் படத்தின் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ரமேஷ் பழனிவேல் செயிதியாளர்களிடம் பேசுகைளில் வழக்கமான திகில் படங்களின் பாணியில் சொல்லமால் சற்று வித்தியாசமான முறையில் இப்படத்தை எடுத்துள்ளது தெரிவித்துள்ளார்.

டீமான் படத்தின் நாயகன் சச்சின்(உதவி இயக்குநர்) சச்சினுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி, திகில் கதை ஒன்றை திரைப்படமாக இயக்குவதற்கான பணிகளில் ஈடுபடுபவர், புதிய வாடகை வீட்டில் குடியேறுகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அந்த வீட்டுக்கு சென்றவுடன், பயங்கரமான கனவுகள் மற்றும் சில அமானுஷ்யமான சம்பவங்களால் தூக்கம் இல்லாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதனால், அந்த வீட்டைப் பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் சச்சினுக்கு, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் என்ன?, அந்த வீட்டில் இருந்து சச்சின் தப்பித்தாரா? இல்லையா? என்பதை திரையில் திகில் கலந்து சொல்வது தான் ‘டீமான்’ படத்தின் திரைக்கதை .

‘டீமான்’ திரை படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சச்சின் திரையில் உணர்வுப்பூர்வமாகவும் நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். திகில் படம் என்றாலும் தனது உணர்வுகள் மூலம் மட்டுமே ரசிகர்களிடத்தில் பயத்தை கடத்த வேண்டும் என்ற சாவலை மிக சிறப்பாக செய்து பாராட்டுபெறுகிறார்.நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதியின் நடிப்பு திரையில் சிறப்பு .

நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதிலும் கும்கி அஷ்வின் காமெடி ரசிக்கும்படி உள்ளது . அனுபவம் வாய்ந்த இணை இயக்குநர் வேடத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஆர்.சோமசுந்திரத்தின் வேடம் சிறப்பு .அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜெயின் குடும்ப உறுப்பினர்களாக நடித்திருப்பவர்கள், நாயகனின் தந்தை, வீடு வாடகைக்கு விடுபவர் என படத்தில் பலர் நடித்திருந்தாலும் நாயகனை சுற்றியே முழு கதையும் நகர்கிறது.

கதாநாயகனுக்கு பிறகு படத்தில் கவனம் பெறுபவர் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமார் தான். படத்தின் ஒவ்வொரு கோணங்களையும் ரசித்து ரசித்து படமாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். திகில் காட்சிகளையும், வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும் பயமுறுத்தும் வகையில் படமாக்கியிருப்பவர், கதாநாயகன், கதாநாயகி சந்திப்பு நடைபெறும் காட்சி, நண்பர்கள் கூடும் காட்சி, அடுக்குமாடி குடியிருப்பை காட்டிய விதம் என அதிகம் மெனக்கெட்டிருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.இசையமைப்பாளர் ரோணி ரபேலின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு. அதிகம் சத்தம் இல்லாமல் பின்னணி இசையமை அமைதியாக கையாண்டிருப்பது படபடப்பான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர் ரமேஷ் பழனிவேல், வழக்கமான திகில் படங்களின் பாணியில் சொல்லமால் சற்று வித்தியாசமான முறையில் இப்படத்தை கையாண்டிருக்கிறார். குறிப்பாக பேய் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் ஒரு மனிதனை நேரடியாக பாதிக்காமல், மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை சொல்வதற்காக அவர் பயணித்த வழி மிகப்பெரிய அளவில் திரையில் வெற்றி பெற்றுள்ளது .

தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்லாமல் அதை, காதல், திரைப்பட இயக்கம் அதை சார்ந்த கதாபாத்திரங்கள் போன்ற கமர்ஷியல் விசயங்களோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் பழனிவேல். ஆனால், அவை அனைத்தும் திரைக்கதையில் ரசிக்கும் படி இருப்பதோடு, படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறத .நாயகன் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் மற்றும் அவரிடம் நடிப்பு வாங்கிய விதம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் இறப்புக்கு பின்னணி போன்றவை படத்தை மேலும் மெருகேற்றுகிறது .

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme