Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு*

பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு*

admin September 2, 2023

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் – ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய போஸ்டரை பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.‌

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்: படத்தின் பிரத்யேக போஸ்டரை அப்படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் பவன் கல்யாண் காக்கி வண்ண சட்டையும், கல்லா லுங்கியும் அணிந்து, மாஸான தோற்றத்தில் தோன்றுவது ..ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

வெகுஜன மக்களின் ரசனையை அறிந்த இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் இதுவரை ஏற்றிராத மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக போஸ்டரில் பவன் கல்யாண் ரத்தம் தோய்ந்த வாளைப் பிடித்துக் கொண்டிருப்பதும்… அவருக்கு பின்னால் தொகுதி மக்கள் நிற்பதும்.. ரசிகர்களுக்கு பவன் கல்யாண் பிறந்த நாளில் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது.

‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் படக்குழுவினர் தொடங்குகிறார்கள்.

இப்படத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கவனிக்க, சண்டை பயிற்சிகளை ராம் -லக்ஷ்மன் அமைக்கிறார்கள்.

Post navigation

Previous Natural Star Nani, Shouryuv, Vyra Entertainments, Hi Nanna New Shooting Schedule Kick-started In Coonoor, Get Ready For A Musical Extravaganza*
Next அஜய் அர்ஜூன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு “மைலாஞ்சி”.*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.