Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • பரம்பொருள் திரை விமர்சனம்

பரம்பொருள் திரை விமர்சனம்

admin September 2, 2023
பரம்பொருள் திரை விமர்சனம்

பரம்பொருள் திரை விமர்சனம்

பாமர மக்களை தனது அதிகாரத்தின் மூலம் எவ்வாறு மாற்றுகிறர் இன்ஸ்பெக்ட் மைத்ரேயன் (சரத்குமார்) அப்படி ஏமாந்தவர்களின் பழிதீர்த்தலே “பரம்பொருள்” திரைகதை , நாயகன்(அமிதாஷ்) ஒரு திருடன். தங்கையின் மருத்துவ செலவிற்காக பணம் திருட மைத்ரேயன் வீடிற்கு செல்கிறார் அமிதாஷ் அப்போது சூழ்நிலை காரணமாக மைத்ரேயனிடம் மாட்டிக்கொள்கிறார் பின்பு சரத்குமார் சொல்வதைக் கேட்டு கீழ்படியும் நிலைக்கு ஆளாகிறார் ஆதி. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை கைப்பற்றி விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். அதே சமயம், சிலை கடத்தல் விவகாரத்தில் அமிதாஷை பிரச்சனையில் மாட்டி விட்டு பணத்துடன் எஸ்கேப் ஆகவும் சரத்குமார் திட்டம் போட, இறுதியில் இந்த சிலையை விற்கும் முயற்சியில் என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் வரும் திருப்பம் என்ன? என்பதெல்லாம் தான் “பரம்பொருள்” படத்தின் திரைக்கதை.

சரத்குமார் அனுபவ நடிப்புக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார் – அமிதாஷ் ,வருண் ராவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலகிருஷ்ணன் சிறப்பாக நடித்திருந்தார். குமார் கங்கப்பன் கலை இயக்கமும், பாண்டிகுமார் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தைக் மேம்படுத்துகிறது . யுவனின் பின்னணி இசை படத்திற்கு பலம்சேர்த்துள்ளது .

இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு பணம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பயணிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்ரக சிறப்பாக நடித்திருக்கும் சரத்குமார், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் தனது நடிப்பினை திரையில் சிறப்பாக நிரூபித்திருக்கிறார். சமணியனியர்கள் போலீஸிடம் சட்டம் பேசும் இளைஞர்களை கஞ்சா வழக்கில் சிக்க வைத்துவிட்டு, அதை சாதாரணமாக கையாளும் காட்சியில் நடிப்பிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் அமிதாஷ், அப்பாவியான முகத்தோடு, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். தங்கையை காப்பாற்றுவதற்காக பணத்திற்காக போராடுபவர், சரத்குமாருடன் இணைந்து பயணிக்கும் போது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார்,சிலை கடத்தல்காரர்களாக வரும் வின்செண்ட் அசோகன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் தங்கள் உடல் மொழி மூலமாகவே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அமிதாஷின் தங்கையாக நடித்திருக்கும் சுவாதிகா, சார்லஸ் வினோத், கஜராஜ், செந்தில் குமரன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

ஒரு சிலையை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நம்மை பரபரப்புடன் பயணிக்க வைத்திருப்பதோடு, இறுதியில் எதிர்பார்க்காத திருப்புமுனையோடு படத்தை முடித்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் சி.அரவிந்த் ராஜ்.

Post navigation

Previous A fully integrated Donation-as-a-Service platform – Trusted Donations launched
Next ரங்கோலி திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.