Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
யோகி பாபுவின் லக்கி மேன் திரை விமர்சனம்

லக்கி மேன் திரை விமர்சனம்

Posted on September 1, 2023

லக்கி மேன் என்பது 2023 ஆம் ஆண்டு பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கிய குடும்ப நகைச்சுவை திரைப்படம். இதில் யோகி பாபு மற்றும் ரைச்சல் ரபேக்கா, வீரா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, மதன் ஜி படத்தொகுப்பு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

“யோகி பாபு வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையே பார்க்காத ஒரு மனிதனுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதுதான் லக்கி மேன்”.

யோகி பாபு, ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக பணியாற்றுகிறார். மனைவி ரேச்சல் ரபேகா, 8 வயதில் மகன் என்று நடுத்தர குடும்ப வாழ்க்கையோடு போராடும் யோகி பாபு, தனது நிலைக்கு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நினைத்து வாழும் யோகி பாபுக்கு, குலுக்கல் சீட்டில் கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது. அந்த காரை தனது முதல் அதிர்ஷ்டம் என்று கொண்டாடும் யோகி பாபு, நண்பன் உதவியுடன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார ரீதியாக உயர்வடைகிறார்.திரைக்கதையின் இரண்டாம்பாதியில் யோகி பாபுவின் கார் திடீரென்று காணாமல் போகிறது, அதன் பிறகு யோகி பாபுவின் வாழ்க்கையில் அதிஷ்டாம் என்னவானது?, காணாமல் போன கார் மீண்டும் யோகி பாபுக்கு கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

காமெடி வேடத்தில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் திரையில் யோகி பாபு, மிக இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் . நடுத்தர குடும்ப கதை என்பதால் சோகமான நடிப்பு மூலம் உறையவைத்தாலும் அவ்வப்போது தனது வழக்கமான நகைச்சுவை பேச்சால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் யோகி பாபு .

யோகி பாபுவின் மனைவியாக நடித்திருக்கும் ரேச்சல் ரபேகா, இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீராவின் நடிப்பு சிறப்பு.திரைக்கதையில் இரண்டாம்பத்தில் அப்துல் லீ மற்றும் யோகி பாபு இருவர்க்கும் நடக்கும் விவாதம் ரசிக்கும்படியகவும் சிந்திக்கும்படியாகவும் திரைக்கதை அமைந்துள்ளது“நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது”, ‘நமக்கு பிடிச்ச விஷயத்தைதான் இயற்கை முதல்ல நம்மகிட்டருந்து பறிக்கும்” “சூப்பர்மேன் ” மற்றும் “சாதாரணமனிதன் தான்- உண்மையான சூப்பர்மேன் ” போன்ற காட்சிகள் அனைத்தும் சிறப்பு.

மனித வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிக் கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு போகாதவர்களுக்கு சிறந்த அறிவுரையாக மட்டும் இன்றி எளிய மக்களுக்கு புரியும் திரைகாவியமாக கொடுத்திருக்கிறார இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.

  • மண்டாடி திரை விமர்சனம்
  • இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!
  • Endemol Shine India’s Bigg Boss Tamil Takes #1 Spot on JioHotstar, Reinforcing Its Dominance in Tamil Entertainment
  • எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’ ஜியோஹாட்ஸ்டாரில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது!
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme