Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • ஹர்காரா திரை விமர்சனம்

ஹர்காரா திரை விமர்சனம்

admin August 27, 2023
ஹர்காரா திரை விமர்சனம்

ஹர்காரா திரை விமர்சனம்

கலர்ஸ் ஃபுல் பீட்டா மூவ்மென்ட் சார்பில் என்.ஏ.ராமு மற்றும் சரவணன் பொன்ராஜ் தயாரித்துள்ள ஹர்காரா படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, அருண் காஸ்ட்ரோ இயக்கியிருக்கிறார்.

இதற்கு முன்பு ‘வி1 மர்டர் கேஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்த ராம் அருண் காஸ்ட்ரோ, இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அவரே இந்தியாவின் முதல் தபால்காரர் வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக காளி வெங்கட், கன்னட நடிகை கவுதமி சவுத்ரி, இயக்குனர்கள் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ், தீனா,
ஒளிப்பதிவு: பிலிப் சு. சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன்,
இசையமைப்பாளர்: ராம் சங்கர்,
எடிட்டர் : டானி சார்லஸ்,
கலை இயக்குநர்: விஆர்கே ரமேஷ்,
மக்கள் தொடர்பு –ஏய்ம் சதீஷ்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலை கிராமதில் இயங்கி வரும் அஞ்சல் அலுவலகத்தில் காளி வெங்கட் பணியாற்றுகிறார். கடித போக்குவரத்தைக் காட்டிலும், முதியோர் உதவித்தொகை, சிறு சேமிப்பு போன்ற பண பரிமாற்றங்களுக்காக அந்த கிராம மக்கள் அஞ்சல் அலுவலகத்தை சார்ந்திருக்கிறார்கள். அதே சமயம், அந்த ஊர் மக்களின் வெகுளித்தனமான செயல்களை தொல்லையாக நினைக்கும் தபால்காரர் காளி வெங்கட், அந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைக்கிறார். அதற்காக, அங்கிருக்கும் அஞ்சல் அலுவலகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டம் போடுவதோடு, அதற்குப் பதிலாக கூட்டுறவு வங்கியைத் திறக்கக் கோரி, கிராம மக்கள் சார்பில் அரசுக்கு மனு ஒன்றை எழுதித் தருகிறார்.இந்த மனுவில் கிராமவாசிகளின் கட்டைவிரல் பதிவை அவர் வேறு காரணம் சொல்லி வாங்குகிறார். இந்த நடவடிக்கையால் தபால் நிலையம் மூடப்பட்டால் வேறொரு இடத்திற்கு மாற்றல் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

ஒரு நாள், பக்கத்து மலையில் மிக உயரமான இடத்தில் உள்ள ஒரு வயதான பெண்ணுக்கு வழங்க வேண்டிய கடிதம், அவரது தபால் நிலையத்திற்கு வருகிறது.காளி அதை வழங்குவதற்காக புறப்படுகிறார், மேலும் அவரது நீண்ட பயணத்தின் போது, ஒரு பெரியவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் காளிவெங்கட்டின் குறைகளை கேட்டுவிட்டு இந்த மலைக்கிராமத்தில் 150 வருடங்களுக்கு முன்பு முதல் முன்னோடி தபால்காரன் மாதேஸ்வரன் மற்றும் உள்@ர் மக்கள் இப்போது கடவுளாக வணங்கும் ஹர்காராவைப் பற்றியும் சொல்கிறார். ஹர்கராவின் கதை காளியின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அவரது மனதை மாற்றுகிறது. ஹர்கரா யார்? ஆங்கிலேயரிடம் வேலை செய்து பின்னர் நாட்டை காப்பாற்றுவதற்காக என்ன தியாகம் செய்தார்? ஏன் மலைவாழ் மக்கள் ஹர்கராவை தெய்வமாக கொண்டாடுகிறார்கள்? காளி மனம் மாறி என்ன முடிவு செய்தார்? ஈசன் மலையிலேயே வேலை செய்தாரா? என்பதுதான் க்ளைமேக்ஸ்.

தற்கால தபால்காரராக சுயநலமாக யோசிக்கும் மனிதராக காளி வெங்கட், இன்னுமொரு யதார்த்தமான நடிப்பை வழங்குகிறார். முதலில் மலைமக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளாமல் தடுமாறும் காளிவெங்கட் கோபப்பட்டு எடுக்கும் முடிவு அதன் பின்னர் தபால்காரரரை அம்மக்கள் எவ்வாறு நினைத்து நடத்துகிறார்கள் என்பதையறிந்து மனம் மாறி அவ்வூர் மக்களாகவே வாழ தொடங்கும் போது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்.

படம் முழுவதும் ஒளிப்பதிவாளர் பிலிப் ஆர் சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் ஆகியோரின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் இயற்கை எழிலோடு படமாக்கப்பட்டு கண்களுக்கு குளுமையோடு, இருகால கட்டங்களின் வித்தியாசத்தை சிறப்பாக வெளிப்படுத்திய விதத்தில் கை தட்டல் பெறுகின்றனர்.

ராம் ஷங்கரின் இசை, முதல் பாதியில் சில நிமிடங்கள், சலசலப்பாக வந்து, உரையாடல்களைப் பின்பற்றுவதைக் சிரமமாக்குகிறது.இருப்பினும், கதை முன்னேறும்போது, அவரது பின்னணி ஸ்கோர் கதையுடன் ஒன்றிணைந்து, மனநிலையை மாற்றிவிடுவதோடு திரையில் அழகான காட்சிகளுடன் ஒன்றிடச் செய்கிறது.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தபால்கார்கள் ஹர்கரா என்று அழைப்பாடுவதும், அவர்கள் எடுத்துச் செல்லும் பணி எவ்வளவு சிரமங்கள், சிக்கல்கள், ஆபத்து நிறைந்தவை என்பதை எடுத்துரைத்து அத்தகைய காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாத நேரத்திலும் மக்களுக்காக வாழ்ந்த “ஹர்கராக்க” போற்றும் விதமாக இந்தப் படத்தில் தபால்காரர்களின் உன்னத பணிக்கும் அர்ப்பணிப்பிற்கும் சமர்ப்பணமாக இந்தப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ.

Post navigation

Previous realme introduces newest additions to its smartphone & AIOT portfolio – realme 11 Series 5G & realme Buds Air 5 series starting from INR 17499 & INR 3699
Next Bharat New-Energy Company (BNC Motors) Inaugurates New Experience Centre in Kanchipuram

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.