ஒடுக்கப்பட்ட மக்களை பரம்பரையாக அடிமையாக துடிப்பவனுக்கும், அதிகாரம் மனித இனத்துக்கு சம உரிமை என்ற போராட்டமே “மாமன்னன்”.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் உதயநிதி ஸ்டாலின் சினிமா பயணத்தில் கடைசிப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ளது மாமன்னன்.
சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியில் ஆளும் கட்சியான சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் 15 ஆண்டுகள் கடந்தும் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் (வாரிசு அரசியல்வாதியாக) ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கல்லூரித் தோழியான லீலாவுக்கு (கீர்த்தி சுரேஷ்) ஒரு பிரச்னை வர, அதற்கு அதிவீரன் உதவ, அதனால் அதிவீரனுக்கும் ரத்னவேலுவிற்கும் இடையே பிரச்னை வருகிறது. அப்பா மாமன்னன், எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் அவரை மாவட்டச் செயலாளர் ரத்னவேலு நடத்தும் விதம் அதிவீரனை கோபமாக்க, இந்தப் பிரச்னை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாமன்னனுக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ரத்னவேலுக்குமான பிரச்னையாகவும், பின் இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்சனையை மையப்படுத்தி சொல்லும் திரைக்கதை “மாமன்னன்”.
சமநிலை எண்ணம் கொண்ட மாமன்னன் வடிவேலுதான் படத்தின் கதாநாயகன். தன் மகனுக்கு நடந்த கொடுமைக்கு நீதியை பெற்றுத்தர முடியவில்லை என்ற விரக்தியில் அமைதியாக ஒரு பாறை மேல் நின்று கொண்டு ஏமாற்றத்துடனும், வலியுடனும் அவர் அழும் காட்சி படத்தின் ஆரம்பத்திலேயே மாமன்னனை நம்முள் கடத்திவிடுகிறது. அதேநேரம், அடக்குமுறையின் விரக்தியில் கையில் கத்தி எடுக்கும் தருவாய் வடிவேலுவுக்கான மாஸ். தமிழ் சினிமா இதுவரையில் இப்படியான வடிவேலுவை பார்த்ததில்லை .
பந்தயத்தில் தோற்றுப் போகும் நாயை இரக்கமின்றி அடித்துக்கொள்ளும் வில்லத்தனத்துடன் ஃபஹத் ஃபாசிலின் மிரட்டல் நடிப்பால் படம் முழுக்க திரையில் மிரட்டுகிறார் . தனக்கு மேல் உள்ளவர்களிடமும், தனக்கு சமமாக உள்ளவர்களிடமும் தோற்றுப் போனாலும் பரவாயில்லை; ஆனால், தனக்கு கீழ் உள்ளவர்களிடம் தோற்றுப்போய் அவமானப்பட கூடாது என்ற தந்தையின் கூற்றை வேத வாக்காக, அதிகாரத்தின் மூலம் அடுத்தவர்களை அடக்கி ஆளத் துடிக்கும் அரசியல் மாவட்டச் செயலாளராக பக்காவாக வாழ்ந்து இருக்கிறார் ஃபஹத். கண் அசைவில் இவ்வளவு வில்லத்தனம்.
இடைவேளைக்குப் பிறகு தேர்தல் களம், ஃபஹத் – உதயநிதி இருவரிடையேயான க்ளைமாக்ஸ் காட்சியும்,
அதிவீரன் உதயநிதி… அப்பாவுக்கான உரிமையை பெறத் துடிக்கும் மகனாக, வலிகள் கொண்ட இளைஞனாக, ஆக்ரோஷமும், இறுக்கமும் கலந்த நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு பக்கபலமாகவும் . ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையில் படத்துக்கு காட்சிகளுக்கு வசனங்களே தேவையில்லை என்னும் அளவுக்கு பின்னணி இசை மூலம் ரசிக்கவைத்துள்ளார் ரஹ்மான்.
