Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • உலக சுற்றுசூழல் தினம்: “கட்டிஸ் கேங்” படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா

உலக சுற்றுசூழல் தினம்: “கட்டிஸ் கேங்” படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா

admin June 5, 2023
உலக சுற்றுசூழல் தினம்: "கட்டிஸ் கேங்" படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா

உலக சுற்றுசூழல் தினம்: "கட்டிஸ் கேங்" படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சௌந்தரராஜா. இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் “கட்டிஸ் கேங்” என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் (Oceanic movies) சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர். ராஜ் கார்த்திக் எழுத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு நிகில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொதுவாக இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சௌந்தரராஜா மரங்கள் நடுவது பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று “கட்டிஸ் கேங்” படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.

Post navigation

Previous குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ‘வீரன்’ திரைப்படம்!
Next ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 
  • News

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 

April 17, 2026
India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 
  • News

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 

April 17, 2026
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026
Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 
  • News

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 

April 16, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.