துரிதம் திரை விமர்சனம்

துரிதம் திரை விமர்சனம்

கார் ஓட்டுநரான நாயகன் ஜெகன், தனது காரில் பணி நிமித்தமாக பயணிக்கும் ஐடி நிறுவன ஊழியரான நாயகி ஈடனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், நாயகி ஈடன், ஜெகனை கார் ஒட்டுநராக மட்டுமே பார்க்கிறார். நாயகி தனது சொந்த ஊருக்கு செல்ல பஸ்டிக்கெட் எடுக்க முயற்சிசெய்க்கிறார் அதில் தோல்வியடைய தோயிகளின் உதவியுடன் நாயகன் ஜெகனுடன் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்ல வேண்டிய சூழல் நாயகி ஈடனுக்கு ஏற்படுகிறது. இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்லும் போது, வழியில் ஈடன் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்ட ஈடனை நாயகன் ஜெகன் எப்படி துரிதமாக எப்படி காப்பாற்றினர் என்பது தான் ‘துரிதம்’ படத்தின் மீதிக்கதை.

‘சண்டியர்’ படத்தில் ஆக்‌ஷன் நாயகனாகவும் ஜெகன், “துரிதம்” படத்தில் இயல்பான நடிப்பை திரையில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க சாலையில் பயணிக்கும் கதையில், இருசக்கர வாகனத்தை ஓட்டுவதில் கூட தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி கதைக்கு பலம் சேர்த்திருக்கும் ஜெகன், நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் காட்சியிலும், நாயகி யார்? என்பது தெரிந்த பிறகு அவரிடம் இருந்து விலகும் காட்சியிலும், மிக நேர்த்தியான நடிப்பு மூலம் தனது கதாபாத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஈடன், கதையோடு பயணிக்கும் வேடத்தில் நாயகியாக பளிச்சிடுகிறார். கண்டிப்பான அப்பாவுக்கு பயந்து வாழ்ந்தாலும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசையோடு பரிதவிக்கும் காட்சிகளில் நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன் வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது. நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர் நடித்த விதமும் பெண்களை அடிமைப்படுத்துபவர்களை பிரதிபலிக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சீனிவாசன், பயண கதையை பரபரப்பான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சியோடும் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.சாதி பிரிவினையால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் கருவாக இருந்தாலும், “பயணத்தில் ஏற்படும் ஆபத்தை மிக சுவாரஸ்யமாக திரையில் ரசிக்க வைத்திருக்கிறாது “துரிதம்”.

admin