Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி*

Posted on May 16, 2023

அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் ‘2018 ‘படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி கதையின் நாயகனாக இணைந்துள்ளார். இந்த திரைப்படம் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் கனவு படைப்பாக இருக்கும் என தெரிய வருகிறது.

இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் அவருடைய முதல் படத்திற்கு பிறகு மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மேலும் இருவரும் இணைந்த ‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்தின் வெற்றியை, இப்படம் மீண்டும் சாத்தியப்படுத்தும் என திரையுலகம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய வேறு எந்த தகவலும் கூடுதலாக வெளியாகவில்லை.

‘2018’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நிவின் பாலியுடன் இணைந்து ஒரு மசாலா படைப்பை வழங்கி வெற்றி பெறுவதற்காக இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் திட்டமிட்டார். இதற்கான அறிவிப்பையும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் அது கைவிடப்பட்டது. ‘2018’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் நிவின் பாலி இணைந்து மலையாள திரையுலகிற்கு மாபெரும் வெற்றி படத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை முழு அளவில் திரையரங்கிற்கு அழைத்து வரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme