Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அஜித், ஷாலினி திருமண நாளை கொண்டாடியுள்ளனர்

அஜித், ஷாலினி திருமண நாளை கொண்டாடியுள்ளனர்

Posted on April 26, 2023

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கோலிவுட்டே வாழ்த்தும் பிரபலமான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அஜித், ஷாலினி இருவரும் தங்களது 23 வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

நடிகர் அஜித் எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லாத நிலையில் அண்மையில் ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இதனையடுத்து அவ்வப்போது தனது குடும்பத்தினர் புகைப்படத்தை அதில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் திருமண நாளை முன்னிட்டு அஜித், ஷாலினியின் செம்ம ரொமாண்டிக்கான புகைப்படம் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிளாக் அன்ட் ஒயிட் பேக்கிரவுண்டில் அஜித், ஷாலினி இருவரும் கட்டிப்பிடித்து கன்னத்தோடு கன்னம் உரசியதை போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் வேறலெவலில் வைரலாகி வருகிறது. அஜித், ஷாலினியின் 23 ஆண்டு கால திருமண வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக இந்த புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக ‘துணிவு’ படம் வெளியாகியிருந்தது. எச். வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கல் வெளியீடாக இந்தப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

  • Prashanth Fertility Launches ‘Prashanth Fertility at Home’ to Strengthen Continuity of IVF Care and Support Better Treatment Outcomes
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme