Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
‘கெத்துல’ – கதையில் பரபரப்பு இருந்தாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு பத்தல!

கெத்துல திரை விமர்சனம்

Posted on November 28, 2022

பொழுதுபோக்கு அம்சங்களோடு, திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுமாக ‘கெத்துல.’

அமைச்சரின் தம்பி என்ற கெத்து, இளைமைத் திமிர் இரண்டும் சேர்ந்திருக்கிற சலீம் பாண்டா பெண்களைக் கடத்தி தனது ‘அந்தரங்க ஆசை’க்கு பலியாக்குவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். பப் (உயர்ரக ஹோட்டலின் மதுபானக்கூடம்) ஒன்றில் மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரீரினுவையும் அதே ஆசையோடு அரவணைக்கப் பார்க்கிறார். அவரை, கதையின் நாயகன் ஸ்ரீஜித் காப்பாற்றுகிறார். அதனால் சலீம் பாண்டாவுக்கு ஸ்ரீஜித் மீது அடக்கமுடியாத ஆத்திரம் உருவாகிறது. இன்னொரு பக்கம், ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஸ்ரீஜித் மீது ரிரீனுவுக்கு காதல் உருவாகிறது. ஸ்ரீஜித் அவரது காதலை ஏற்கும் மனநிலையில் இல்லை. அதற்கான காரணம் என்ன என்பதும், ஸ்ரீஜித் மீது கொலைவெறியிலிருக்கிற சலீம் பாண்டா அவரை என்ன செய்தார் என்பதுமே திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை!

அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் சலீம் பாண்டாவுக்கு பெண்களைக் கடத்தி தனது ‘அந்தரங்க ஆசை’க்கு பலியாக்குவது வழக்கம். அந்த வரிசையில் மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரீரினுவையும் அணுகுகிறார். அவரை, அந்த நேரத்தில் அங்கிருந்த ஸ்ரீஜித் காப்பாற்றுகிறார். அதனால் சலீம் பாண்டாவுக்கு ஸ்ரீஜித் மீது கொலைவெறி வருகிறது. அதே நேரம் ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஸ்ரீஜித் மீது ரிரீனுவுக்கு காதல் உருவாகிறது. ஸ்ரீஜித் அந்த காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார்…
இப்படி பயணிக்கும் கதையில் ஸ்ரீஜித் காதலை ஏற்க மறுத்தது ஏன்? ஸ்ரீஜித்தை பழிவாங்கத் துடிக்கிற சலீம் பாண்டா என்ன மாதிரியான நடவடிக்கையில் இறங்கினார் என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் சிலபல திருப்பங்களோடு விரிகிறது. ஸ்ரீஜித் யார் என்ற முன்கதையில் அதிர்ச்சியும் விறுவிறுப்பும் இருக்கிறது.

இருவேறு தோற்றங்களில் வருகிற ஸ்ரீஜித்துக்கு உணர்வுகளை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்துகிற பாத்திரம். அதனை நேர்த்தியாக செய்திருப்பவர் ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார்.

ஆரம்பக் காட்சிகளில் கவர்ச்சியில் கவர்ந்தாலும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது, காதலனுக்கு நேர்ந்த பிரச்சனைகள் தெரிந்து மனம் கலங்குவது என தனது நடிப்புப் பங்களிப்பை நிறைவாகத் தந்திருக்கிறார்.

வில்லனாக வரும் சலீம் பாண்டாவின் மிரட்டலான நடிப்பு கதைக்கு பெரும் பலம். அமைச்சராக சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனராக ரவிகாலே என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது!

திருநங்கைகளாக நடித்திருப்பவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டுப் பாராட்டலாம்.

பரபரப்பான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் வி.ஆர்.ஆர். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

பாடல்களை ரசிக்கும்படி தந்திருக்கும் ஷீவா வர்ஷினி பின்னணி இசையிலும் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார். கே.ஷஷிதர் ஒளிப்பதிவு கச்சிதம்!

‘கெத்துல’ – கதையில் பரபரப்பு இருந்தாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு !

  • டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
  • நாய்ஸ் & கிரைன்ஸ் சென்னையில் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது; யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன்
  • யுவன் ஷங்கர் ராஜாவின் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) இந்திய மேடை இசையின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது
  • விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme