Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் “நாதாபிஷேகம்”

Posted on October 10, 2022

மக்களிடையே ஒற்றுமையும் சகோதர பாசமும் மேலோங்க, ஆன்மீகம் தழைக்க, கர்மாவினால் தவிக்கும் ஏழைமக்களுக்கு உதவ, சனாதன தர்மத்தை உலகில் நிலைநாட்ட, இறைவன், பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குரு போன்ற மகான்கள் உருவில் அவதார புருஷராக நம்மிடையே அவதரிக்கிறார்.

அவதூத தத்த பீடத்தின் தலைமை பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதார புருஷராக அவதரித்து தர்மத்தின் தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் உலக அமைதிக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து ஆன்மீக சேவையாற்றிவருகிறார்.

பரம பூஜ்ய ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி அவர்கள் கர்நாடகாவில், மேகதாது என்ற இடத்தில், ஸ்ரீ ஜெயலெக்ஷ்மி மாதாவிற்கும், ஸ்ரீ நரசிம்ஹ சாஸ்திரிக்கும், காவேரிக்கரையில் உடல் முழுவதும் வீபூதி, ருத்ராக்ஷ மாலையுடன் அவதரித்தவர்.

இவர் ஒருஅவதார புருஷர், ராஜ ரிஷி, யோகி, நாத பிரம்மா, மஹா பண்டிதர், புலமை வாய்ந்த ஆன்மீகக் கவிஞர், ‘கீபோர்டு’ இசை வித்தகர், இசை மேதை, ஆழ்ந்த தத்துவ ஞானி, ‘கிரியா யோகா’ ஆசிரியர், என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.. பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜியின் முக தேஜஸிலிருந்தே அவரது பல்கலை நிபுணத்துவம் நமக்கு தெரியும்.

இசை மேதையான பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிஜி, ‘MUSIC FOR HEALING’ அதாவது இசையின் மூலம் வியாதிகளை குணப்படுத்துதல், கட்டுப்படுத்துதல்’ என்ற ஒரு இயற்கை ரீதியான வகையில், அதற்கான ராகங்களை கண்டெடுத்து, தனது KEY BOARD இசையினால், பக்க வாத்தியக் குழுவினருடன் இசைத்து, பலரின் தீர்க்க முடியாத வியாதிகளை தீர்த்த தீர்க்கதரிசி. அந்த இசை அனைவரையும் மயக்கும் ஒரு அற்புதமான இசை என்றால் அது மிகையாகாது.

பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் வெறும் இசையோடு நின்று விடவில்லை, புராணங்களையும் இதிஹாசங்களையும் நமக்கு தனது சொற்பொழிவின் மூலம் எடுத்துரைத்து நடுவில் பாடல்களையும் பாடி பக்தர்களின் அக புற துன்பங்களை போக்கியருள்வார்.

பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி அவர்களின் 80 ஆம் அவதார தினம் கடந்த மே மாதம் 26ஆம் தேதி மைசூரு அவதூத தத்தபீடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியதும், நவராத்திரி விழாவை மைசூரில் நடத்திவிட்டு தமிழக பக்தர்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி சென்னைக்கு ஆன்மீக விஜயம் செய்கிறார்.

அவரது சென்னை விஜயத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஆஸ்ரமத்தின் சார்பாக வரும் 15ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5.15 முதல் இரவு 9.00 மணிவரை, டிடிகே சாலையிலுள்ள ‘நாரதகான சபா’ கலையரங்கில்80 கர்நாடக சங்கீத வித்வான்கள், பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி தலைமையில், மிகப்பிரபலமான சங்கீத வித்வான்களான சுதா ரகுநாதன்,. நித்ய ஸ்ரீ, தமிழ்நாடு இசைக் கல்லூரியின் துணை வேந்தர், மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம பிரபல பரத நாட்டியக் கலைஞர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் பத்மா சுப்ரமணியம் உட்பட 80 பிரபல வித்வான்கள் ஒரே சமயத்தில், அவதார புருஷரான பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி அவர்களுக்காக ‘தத்தப்ரியா’ எனும் புதிய ராகத்தில் கீர்த்தனை பாடி ‘நாதாபிஷேகம்’ செய்ய இருக்கிறார்கள். ஆன்மீக அன்பர்கள் திரளாக கலந்துகொண்டு இசையில் லயித்து பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜியின் ஆசியையும் பெற்றுச் செல்லுங்கள். பாரதியாரின் கொள்ளுபேரன் ராஜ்குமார் பாரதி இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்.

தேதி: 15.10.2022 நேரம்: மாலை 5.15 முதல் இரவு 9.00 மணிவரை இடம்: நாரத கான சபா டிடிகே சாலை சென்னை.

கணபதி ச்ச்சிதான்ந்த சுவாமிகள் டிரஸ்ட் நிர்வாகிகள் சுரேஷ்கோபாலன், ஸ்ரீதர் நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியை விரிவாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

  • செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!
  • ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI
  • ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
  • VR Livin Ventures Launches Premium Villa Community in Madhavaram
  • மாதவரத்தில், பிரீமியம் வில்லாக்களை அறிமுகப்படுத்துகிறது, வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme