Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மாதவரத்தில், பிரீமியம் வில்லாக்களை அறிமுகப்படுத்துகிறது, வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் !

Posted on August 29, 2026

● 6.6 ஏக்கர் பரப்பளவில் 80-க்கும் மேற்பட்ட சொகுசு 4 மற்றும் 5 படுக்கை அறைகள் கொண்ட வில்லாக்களின் விலை, ரூ.2.25 கோடியிலிருந்து தொடங்குகிறது !

● முன்பதிவு செய்த 12 முதல் 15 மாதங்களுக்குள் ஒப்படைக்கத் திட்டம் !

சென்னை, ஆகஸ்ட் 29, 2026

வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் எல்.எல்.பி., (VR Livin Ventures LLP) வடசென்னையின் மாதவரத்தில் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாதுகாப்புடன் கூடிய பிரீமியம் வில்லா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 80-க்கும் மேற்பட்ட 4 மற்றும் 5 சொகுசு படுக்கை அறை வில்லாக்களைக் கொண்டுள்ள இந்தத் திட்டம், இடவசதி, தனியுரிமை மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை விரும்புபவர்களுக்கான பிரத்யேகக் குடியிருப்பு வளாகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வசீகர வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் அறிமுக விழா இன்று (29 ஆகஸ்ட் 2026), சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டி.வி.ஹெச். குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. என். ரவிச்சந்திரன் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். எஸ்.பி.ஆர். இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. பி. ஹிதேஷ் கவாட் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த வில்லாக்களின் விலை ரூ. 2.25 கோடியிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த நாளிலிருந்து 12 முதல் 15 மாதங்களுக்குள் வீடுகள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதவரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வி.ஆர். லிவின் வில்லாக்கள், நகரின் முக்கிய பகுதிகளுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. பிரபல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், வங்கிகள், மெட்ரோ ரயில், பேருந்து உள்ளிட்ட முக்கிய பொதுப் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் இத்திட்டத்திற்கு அருகில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விசாலமான குடியிருப்புகள், அகலமான உள்சாலைகள், அழகிய பசுமைச் சூழல் மற்றும் 24 மணி நேரப் பாதுகாப்பு வசதிகளுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வாழ்க்கை முறை வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து நிறுவனத்தின் நிறுவனர்களான நிர்வாக இயக்குநர் திரு. விமல் குமார் ஜெயின் (லூனியா) (VIMAL KUMMAR JAIN (LUNIA)) மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. ரூபேஷ் குங்குலோல் (RUPESH KUNKULOL) ஆகியோர் கூறுகையில், “வி.ஆர். லிவின் மூலம் ஒரு பிரீமியம் வில்லா வளாகத்தை மட்டுமல்லாமல், மேம்பட்ட வாழ்க்கை முறையையும் உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். திறந்தவெளி, இயற்கை வெளிச்சம் மற்றும் சமகால கட்டிடக் கலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஆழமான சிந்தனையுடன் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், வளர்ச்சி, தனியுரிமை, விசாலமான இடவசதி மற்றும் நவீன வசதிகள், சிறந்த இணைப்புகளைக் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது. நகர வாழ்க்கையின் வசதிகளை அனுபவிக்க விரும்புவதுடன், அதன் பரபரப்பில் சிக்கிக்கொள்ள விரும்பாதவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றனர்.

இந்தத் திட்டத்தில் சமூக மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக கஃபே, அசோசியேஷன் அறை, ரிஃப்ளெக்சாலஜி பகுதி, நறுமணத் தோட்டம், செல்லப் பிராணிகள் பூங்கா மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள், உட்புற விளையாட்டு வசதிகள், கோ-வொர்க்கிங் லவுஞ்ச், வாசிப்பு லவுஞ்ச், யோகா டெக், மினி தியேட்டர் மற்றும் கரோக்கி அறை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூரைத் தோட்டம், பார்ட்டி லவுஞ்ச், கெசீபோக்களுடன் கூடிய டெரஸ் தோட்டம் மற்றும் பிற வெளிப்புற வசதிகளும் இத்திட்டத்தின் வாழ்க்கை முறை அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

வி.ஆர். லிவின் திட்டத்தில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் பாதுகாப்பு அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முக்கிய கதவுகளுக்கு பாதுகாப்பான பயோமெட்ரிக் அணுகல் வசதி வழங்கப்பட்டுள்ளதுடன், செயலி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்விட்ச்களும் இடம்பெற்றுள்ளன. இது குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பையும் வசதியையும் வழங்குகிறது.

இந்த வில்லாக்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போர்டு காஸ்ட்-இன்-சிடு பைல் அடித்தளத்துடன் (bored cast-in-situ pile foundation) கட்டப்படுகின்றன. கரையான் தடுப்பு சிகிச்சை, வலுவான ஆர்.சி.சி. தூண்கள் மற்றும் பீம்கள் ஆகியவற்றுடன் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. வீடுகளில் மறைவான மின் வயரிங், தரமான மாடுலர் ஸ்விட்ச்கள் மற்றும் கேபிள்கள், ஏசி மின் இணைப்பு பாயிண்ட்கள், டி.டி.ஹெச். மற்றும் இணைய இணைப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆழ்துளைக் கிணறு மற்றும் மெட்ரோ வாட்டர் வசதி, மேல்நிலை நீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் சீரான நீரழுத்தத்தை உறுதி செய்யும் பிரஷர் பம்புகள் உள்ளிட்ட பிரத்யேக நீர் விநியோக அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் எல்.எல்.பி. குறித்து

நிர்வாக இயக்குநர் திரு. விமல் குமார் ஜெயின் (லூனியா) மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. ரூபேஷ் குங்குலோல் ஆகியோரால் நிறுவப்பட்ட வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் எல்.எல்.பி., குடியிருப்பு, ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனமாகும். திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல ஆண்டுகளாகப் பெற்ற அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில், சமகால கட்டிடக்கலை, செயல்பாட்டுத் திறன் மற்றும் தரமான வாழ்க்கைச் சூழலை ஒருங்கிணைக்கும் வகையில் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட வீடுகளை உருவாக்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

இந்த நிறுவனத்தின் திட்டங்களில், மாதவரத்தில் 85 சொகுசு 2 மற்றும் 3 BHK அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட செரினிட்டி, மாதவரத்திலேயே தற்போது கட்டுமானத்தில் உள்ள 226 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட எவிட்டா ஆகியவை அடங்கும். எவிட்டா திட்டத்தில் 21,000 சதுர அடிக்கும் அதிகமான வாகனங்கள் செல்லாத போடியம் பகுதி இடம்பெற்றுள்ளது. மேலும், அம்பத்தூரில் 54 சொகுசு 4 மற்றும் 5 BHK வில்லாக்களைக் கொண்ட பிரிஸ்டின் திட்டமும் நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இதில் பிரம்மாண்டமான கிளப் ஹவுஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைச் சூழல் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

  • ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI
  • ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
  • VR Livin Ventures Launches Premium Villa Community in Madhavaram
  • மாதவரத்தில், பிரீமியம் வில்லாக்களை அறிமுகப்படுத்துகிறது, வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் !
  • அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!7
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme