Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ராஜ்கிரண் அளித்துள்ள விளக்கம் திரையுலகினரை அதிரவைத்துள்ளது.

நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகரை காதல் திருமணம்அதிரவைத்துள்ளது.

Posted on September 8, 2022

நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகரை காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், ராஜ்கிரண் அளித்துள்ள விளக்கம் திரையுலகினரை அதிரவைத்துள்ளது.

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என்று பன்முகத்தை கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து சினிமாவால் ஆட்கொள்ளப்பட்டவர். இவரின் படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்றளவு மக்கள் மனதில் இருந்து நீங்காதவை. மொய்தீன் அப்துல் காதர் என்ற இயற்பெயரை கொண்ட ராஜ்கிரணுக்கு பத்ம ஜோதி என்ற மனைவியும், ஜீனத் ப்ரியா என்ற மகளும், நயினார் முகமத் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் நடிகர் முனீஸ் ராஜை காதலித்து கரம்பிடித்ததாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜ்கிரண், ஜீனத் பிரியா தனது மகள் இல்லை. அவர் எனது வளர்ப்பு மகள் என்று முகநூலில் பரபரப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், “என் “மகளை”, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் @ நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது.

இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை “வளர்ப்பு மகள்” என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விசயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது, எனக்குத்தெரிய வந்தது.
அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக விசாரித்து தெரிந்து கொண்ட நான், என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார்.

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ” சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்”
என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துககொண்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான, “லட்சுமி பார்வதியை” பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில் தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல், பொய் பொய்யாக பேசிக்கொண்டு திரிகிறது, இந்தப்பெண். இந்த விசயத்தில் நான் கோபப்பட்டபோது கூட, என்னை சமாதானப்படுத்தி, அந்தப்பெண்ணுக்காக பரிந்து பேசி இன்று வரை அந்தப்பெண்ணுக்கு உறுதுணையாக நிற்பது, என் மனைவி மட்டும் தான்.

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme