Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்

Posted on December 6, 2021

எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகிறது.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.பிரபுவே நடிக்கிறார். இது இவருக்கு முதல் படமாகும்.

இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத் தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.ஹரிமுருகன், நடன இயக்குநர் – சங்கர், காஸ்டிங் இயக்குநர் – ஆரோக்கியதாஸ், காஸ்ட்யும் டிசைனர் – ரெபேகா மரியா, நிர்வாக தயாரிப்பாளர் – ஆர்.குமரேசன், கே.எஸ்.செந்தில் குமார், மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன் – சதீஷ்வரன்.

அமெரிக்காவில் ஆங்கிலப் படம் மற்றும் டெலிபிலிம்களை இயக்கிய கிரிதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme