மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி

KNR Movies சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் மாவீரன் பிள்ளை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் கூறுகையில்…

தற்போது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் போரட்டங்களான விவசாயிகள் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை பற்றிய படம் என்பதால் நான் இப்படத்தில் எனது பங்கு இருக்க வேண்டும் என்று நடிக்க முன் வந்தேன் என்றார்.

இவர்களுடன் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை ரவிவர்மா, ஒளிப்பதிவு மஞ்சுநாத், படத்தொகுப்பு ஜூலின். பாடல்கள் எழுதி பாடியுள்ளார் ஆலயமணி.

இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் டெல்லியிலும் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *