படத்துக்கு அன்பிற்கினியாள் என்ற தென் அமுது தமிழ்ப் பெயரை வைத்ததற்குப் படக் குழுவினருக்கு முதல் பாராட்டுகள்…
மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச உறவை மையமாக கொண்ட இந்த படம் தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என பெயரில் ரீமேக் இந்த மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள படத்தினை.
நடிகர் அருண் பாண்டியன் தயாரிப்பில் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் நடிப்பில் பல வெற்றி படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்கி இருக்கிருக்கும் படம் அன்பிற்கினியாள்.
எல் ஐ சி ஏஜென்டாக வேலை பார்க்கிற — மனைவியை இழந்த – சுய சாதி மதப் பற்றுக் கொண்டவரான நல்ல சிவத்தின் ( அருண் பாண்டியன்) உலகம்… மிச்சம் உள்ள வாழ்க்கை… எல்லாமே அவள் மகள் அன்பிற்கினியாள்( கீர்த்தி பாண்டியன்)தான் .
கனடாவில் நர்சிங் வேலைக்குப் போக வேண்டிய லட்சியத்தில் இன்டர்நேஷனல் இங்க்லீஷ் கோர்ஸ் படித்துக் கொண்டே ,மாலில் உள்ள துரித உணவுக் கடையில் பணியாற்றும் அன்பிற்கினியாளுக்கு சார்லஸ் என்ற இளைஞனோடு – இதுவரை அப்பாவுக்குத் தெரியாத – காதல் .சார்லசுக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைக்க, அவனை சந்தித்து விட்டு, அவனும் அன்பிற்கினியாளும் இரு சக்கரவாகனத்தில் திரும்பும் வேளையில் , போலீஸ் நிறுத்தி விசாரிக்க,
அன்பிற்கினியாளுக்கு தெரியாமல் அவன் ரகசியமாகக் குடித்திருப்பது தெரிய வர, போலீஸ் நல்ல சிவத்தை வரவழைக்க,கிறிஸ்தவ இளைஞனோடு மகளுக்கு காதல் என்பதை அறிந்து நல்ல சிவம் அதிர்ந்து , மகளிடம் பேசுவதை நிறுத்தி அவளை உடனே கனடாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் . காதலன் ஹைதராபாத் கிளம்ப , போலீசும் சிவமும் மகள் காதலன் கூடப் போய் விட்டதாக எண்ணி அவனை வரவழைத்து பிடித்து அடித்து, வேறு திசையில் போராட, சைக்கோ போலீஸ் வேறு தன் வேலையைக் காட்ட , துரித உணவுக் கடையில் எதிர்பாராதா விபத்து ஏற்படுகிறது இந்த விபத்தில் தன் உயிரை காத்துகொல்கிறளா இல்லை அந்த விபத்தில் சிக்கி மடிந்து போகிறாள என்பது தான் மீதி கதை.
அன்பிற்கினியாள் கதாபாத்திரத்தை உள் வாங்கி பிரம்மாதமாக நடித்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன் . இந்த கதாபாத்திரத்துக்கு நான் தான் என்று மார் தட்டி கொள்ளும் அளவுக்கு ஒரு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் கீர்த்தியின் நிஜ அப்பாவான அருண் பாண்டியனே அப்பா மகள் உறவுக்கான பந்தத்தில் ஒரு உயிரோட்டம் உண்மையாக தெரிகிறது காரணம் உண்மையான அப்பா மகள் நடித்ததால் நடித்திருக்கிறார். கதையின் தன்மையறிந்து கதையோடும் தன் மகளோடும் வாழ்ந்து இருக்கிறார் .இவரை தவிர வேறுயாரையும் நினைத்து பார்க்க வைக்க முடியாத அளவுக்கு மிக சிறப்பாக நடித்து உள்ளார்.இணைந்த கைகள் வசனம் கை தட்டலுக்கு உதவுகிறது.
காதலனாக வரும் ப்ரவீனுக்கு இது அறிமுக படம் என்றாலும், அனுபவ நடிகனை போன்று நடித்து அசத்தியிருக்கிறார்.போலீஸ் எஸ் ஐ’ஆக வரும் ரவீந்திர விஜய், தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். கண் பார்வையிலேயே வில்லத்தனத்தை கொண்டு வந்து மிரட்டுகிறார். படம் பார்ப்பவர்களுக்கு அவரை அடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு ஒரு அமைதியான வில்லத்தனத்தை வெளிபடுத்தியுள்ளார்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு தான். ஒவ்வொரு காட்சியையும் தன் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார் கதைக்கு தேவையான காட்சியமைப்பு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படத்தின் ஓட்டத்திற்கு மற்றொரு பலம் என்னவென்றால் அது கலை இயக்குனர் தான். இரண்டாம் பாதி முழுவதும் தனது கையில் எடுத்து கலையை கச்சிதமாக செய்திருக்கிறா எஸ்.ஜெயச்சந்திரன்.
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கோகுல் ரீமேக் படம் என்றாலும் தமிழுக்கு ஏற்ப கதைகளத்தையும் நட்சத்திர தேர்வை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல மலையாள கதையும் சிதைக்காமல் படத்துக்கும் கதபாதிரங்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார். நிச்சயாமாக இந்த படம் இயக்குனர் கோகுலுக்கு மிக பெரிய அந்தஸ்தை வாங்கி கொடுக்கும் .
அறிமுக இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் படத்தின் மிகபெரிய பலம் என்று சொன்னால் மிகையாகாது பின்னை இசையில் பின்னி எடுத்துள்ளார் ஒவ்வொரு காட்சிக்கும் தன் இசை மூலம் உயி கொடுத்துள்ளார். அதே போல பாடல்களும் ரசிக்க வைக்கிறது .
அன்பிற்கினியாள் நிச்சயம் திரையரங்குக்கு வரும் அனைவரின் அன்பையும் பெறுவாள் இந்த அன்பிற்கினியல் என்றால் மிகையாகாது


Leave a Reply