பிக் பாஸ் – 4 விரைவில் புரோமோ

பிக் பாஸ் - 4 தொடங்கும் தேதி வெளியானது !

தொலைக்காட்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழின் 4 வது சீசன் விரைவில் துவங்க இருந்தாலும், நிகழ்ச்சி துவங்கம் தேதி இதுவரை வெளியாகவில்லை. தற்போது கமல்ஹாசன் இடம்பெற்ற புரோமோ வீடியோ வெளியாகியிருப்பதோடு, போட்டியாளர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

சீரியல் நடிகை ஷிவாணி மற்றும் திரைப்பட நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் பிக் பாஸ் 4-ல் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரம்யா பாண்டியன், புகழ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகிறது. ஆனால், இதுவரை போட்டியாளர்கள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. முதலில் செப்டம்பர் மாதம் ஒளிபரப்ப பிக் பாஸ் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளால் காலதாமதம் ஆனதால், தற்போது நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

அக்டோபர் 4 ஆம் தேதி அல்லது 11 ஆம் தேதியில் இருந்து பிக் பாஸ் 4 ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 4-ன் இரண்டாவது புரோமோ வீடியோவை இன்னும் சில தினங்களில் ரிலீஸ் செய்ய பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளது.

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *