தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் ‘பிதா’

Pitha presented by Dir Myskkin -indiastarsnow.com

தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் ‘பிதா’!

எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன் நடிகராக அறிமுகமாகிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல புதிய படவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. தன்னுடைய தயாரிப்பில், அருண் விஜய் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் எதிர்மறை வேடத்தில் அறிமுகமாகிறார் மதியழகன். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியைத் தொடர்ந்து தற்போது, ‘சவரக்கத்தி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யாவின் ‘பிதா’ படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன்.

மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘பிதா’ படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப் படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியை பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது.

இன்று காலை நடைபெற்ற சம்பிரதாயமான துவக்க விழா பூஜையில் ‘பிதா’ படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கு கொண்டனர். மதியழகனைத் தவிர கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி ஆகியோருடன் வேறு சில முக்கிய நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர். பிரபல நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் ‘பிதா’ படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
Pitha presented by Dir Myskkin -indiastarsnow.comPitha presented by Dir Myskkin -indiastarsnow.comPitha presented by Dir Myskkin -indiastarsnow.comPitha presented by Dir Myskkin -indiastarsnow.com

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *