விஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி

Sushant-Singh-inspired-Vijays-Bigil-Rayappan-role_indiastarsnow.com

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதற்கு சுஷாந்த் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

’பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் ‘ராயப்பன்’ கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அந்த கேரக்டருக்காக ஒரு சிலரை பரிசீலனை செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார்.

அப்போது மும்பையில் இருந்து வந்திருந்த ஒப்பனை கலைஞர் ஒருவர் சுஷாந்த் சிங் நடித்து வரும் சிச்சோரே என்ற படத்தில் அவருடைய இரண்டு கதாபாத்திரம் குறித்த புகைப்படங்களை காண்பித்தார். அந்த புகைப்படங்களை பார்த்த பின்னர் தான் ராயப்பன் கதாபாத்திரத்திலும் ஏன் விஜய் நடிக்கக்கூடாது என்ற யோசனை எனக்கும் அட்லீக்கும் வந்தது.

அதன் பின் விஜய்க்கு ராயப்பன் கதாபாத்திரத்தின் டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து தான் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய்யும் வயதானவராக இதுவரை நடித்ததில்லை என்பதால் அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
Sushant-Singh-inspired-Vijays-Bigil-Rayappan-role_indiastarsnow.com

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *