Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Meera-mitun-slams-kangana_indiastarsnow.com

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு? – மீரா மிதுன் பாய்ச்சல்

Posted on June 30, 2020

நடிகை மீராமிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாக சாடி உள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கத்தை கங்கனா கண்டித்து பேசி இருந்தார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. வாரிசு நடிகைகள் கங்கனாவை கடுமையாக சாடினர். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரனாவத் தகுதி இல்லாதவர் என மீரா மிதுன் கூறியுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: “சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் கங்கனா ரனாவத் தேவையின்றி கருத்து தெரிவித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. தமிழ் திரை உலகில் இருக்கும் அரசியலால் உங்களை ஜெயலலிதா வேடத்துக்கு தேர்வு செய்து தவறு இழைத்துள்ளனர். சகாப்தமாக வாழ்ந்த துணிச்சல் மிக்க ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நீங்கள் கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவர்” என்று மீராமிதுன் கூறியுள்ளார்Meera-mitun-slams-kangana_indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
  • பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
  • அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’
  • யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
  • Two Powerful Women. One Unforgiving Rivalry. A Legacy at Stake:
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme