Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Kannum Kannum Kollaiyadithaal Film Review

Posted on March 10, 2020

துல்கர் சல்மானும், ரக்‌ஷனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்து கொண்டு ஆப் மூலம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நாயகி ரிது வர்மாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் துல்கர் சல்மான்.

இருவரும் காதலித்து வரும் நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனன் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அதன்பின் துல்கர் சல்மானின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படமாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுக்க என்ன இருக்கிறது என்று தியேட்டரில் போய் உட்கார்ந்தால், முழு நேரமும் உங்களை எழுந்திரிருக்க விடாமல் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள். இதுதான் இந்த கதையின் சிறப்பம்சம்.

டத்தின் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானுக்கு இப்படம் 25-வது படம். சத்தமே இல்லாமல் வெளியானாலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவிற்கு நடித்திருக்கிறார். நண்பராக வரும் ரக்‌ஷன் ஆங்காங்கே காமெடியில் கலக்கி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மா அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பிற்பாதியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் நிரஞ்சனிக்கு கொஞ்சம் சீரியசான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் நடிகராக முத்திரை பதித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். இவரது குரல் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் பெற்ற இவரை, இனிமேல் ஸ்டைலிஷ் நடிகர் என்றே அழைக்கலாம்.

தல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை சுவாரஸ்யமாக எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. திரைக்கதையில் பல திருப்பங்கள் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களை மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

மசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் ரகம். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்
  • அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –
  • துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
  • விஸ்வநாத் அண்ட் சன் திரை விமர்சனம்
  • கிரிப்டோ டு மெத்தபெட்டமைன்… கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்… பாயுமா நடவடிக்கை?
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme