Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
kaani maadam film review-indiastarsnow.com

கன்னி மாடம் திரைவிமர்சனம்

Posted on February 25, 2020

சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஶ்ரீராம் கார்த்திக்கும் ஆடுகளம் முருகதாசும் உறவினர்கள். ஊரில் வசதியாக வாழ்ந்த இவர்கள் இங்கு ஆட்டோ ஓட்டுவதற்கு பின்னணியில் ஸ்ரீராம் கார்த்திக் தந்தையின் சாதிவெறியால் ஏற்பட்ட சம்பவம் இருக்கிறது. kaani maadam film review-indiastarsnow.com

ஊரை விட்டு சென்னை வரும் காதல் ஜோடி விஷ்ணுவும் சாயாதேவியும் ஶ்ரீராம் கார்த்திக், முருகதாஸ் தங்கியிருக்கும் வீட்டின் அருகிலேயே குடி வருகிறார்கள். அவர்களை சாதிவெறி கொண்ட கும்பல் ஆணவக்கொலை செய்ய துரத்துகிறது. சாயாதேவியை கொன்று விட்டு, விஷ்ணுவை அழைத்துச் செல்வது அவர்கள் திட்டம்.

அவர்களின் திட்டம் நிறவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. kaani maadam film review-indiastarsnow.com

ரீராம் கார்த்திக்குக்கு உள்ளுக்குள் சோகத்தை வைத்துக்கொண்டு நண்பர்களுக்காக சிரித்து வாழும் கதாபாத்திரம். அதை சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதி முழுக்க உணர்வுபூர்வமான நடிப்பு.

சாயாதேவிக்கு படத்தையே தாங்கும் கதாபாத்திரம். முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் மட்டும் வரும் விஷ்ணுவும் கவர்கிறார். ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, பிரியங்கா சங்கர் மூவருமே காமெடியாக படத்தை நகர்த்துகிறார். உணர்வுபூர்வ காட்சிகளிலும் மூவரும் கலக்கி இருக்கிறார்கள். ஆட்டோ டிரைவராக வந்து காதலை, மனதுக்குள் புதைக்கும் வலினா, சாதிவெறியுடன் அலையும் கஜராஜ் என அனைவரும் கச்சிதமான தேர்வு.kaani maadam film review-indiastarsnow.com

நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராகி இருக்கும் படம். முதல் படத்திலேயே சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதையை எழுதி, அதை நேர்த்தியாக சொல்ல முயன்றுள்ளார். இடைவேளை காட்சியும் இறுதிக்காட்சியும் அவரை தேர்ந்த இயக்குனராக அடையாளம் காட்டுகிறது.kaani maadam film review-indiastarsnow.com

ஹரி சாயின் பின்னணி இசையும் ஹரிஷ் ஜெ இனியனின் ஒளிப்பதிவும் கதையோடு பயணிக்க உதவுகிறது. சாதிவெறி கொடுமையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த கதையின் முடிவு அதிர்ச்சி கொடுக்கிறது. சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் சாதிவெறியுடன் போராடும் காதலையும் நேசத்தையும் இயல்பாக சொன்னதில் படம் மனதை கனக்க செய்கிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme