Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
85 வயது மூதாட்டியாக

காஜல் அகர்வா85 வயது மூதாட்டியாக ?

Posted on February 11, 2020

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்–2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபால் ஆகிய இடங்களில் நடந்தது. 85 வயது மூதாட்டியாக

கமல்ஹாசன் 90 வயது முதியவராக வந்து வர்ம கலையால் வில்லன்களுடன் மோதுவதுபோன்ற காட்சிகளை படமாக்கினர். அப்போது கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை யாரோ செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படம் வைரலானது.

பின்னர் கமல்ஹாசனுக்கு ஆஸ்பத்திரியில் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தினர். சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு இப்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு பிரமாண்ட அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

தற்போது நடிகை காஜல் அகர்வாலும் இந்தியன்–2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவர் தற்காப்பு கலைகள் தெரிந்த 85 வயது மூதாட்டியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டூடியோவில் உள்ள அறையில் காஜல் அகர்வால் மேக்கப் போடுவதுபோன்ற படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தனது முகத்தை மறைத்தபடி அந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme