Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

Posted on February 10, 2020

முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகை ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில், பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றிருக்கிறது.

படம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறியதாவது…நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே தேர்வு செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள்.
அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர் இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகையுடன் நடந்துகொள்வார்.நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு

. நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். “ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும் என்றார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme