Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
மலேசியாவில் தைப்பூச திருவிழா அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் நேர்த்திக் கடன்

மலேசியாவில் தைப்பூச திருவிழா

Posted on February 8, 2020

மலேசியாவில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. தைப்பூசம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப் படுகிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிலும் இன்று தைப்பூசத் திருவிழா களை கட்டியது. கோலாலம்பூரின் புறப்பகுதியில் உள்ள பத்துகுகை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடம்பில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதே போல் ஆண்கள், பெண்கள் என பலரும் பால்குடம் ஏந்தி, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்தும் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிப்பட்டு வருகின்றனர்.

மலேசியாவில் தைப்பூச திருவிழா அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் நேர்த்திக் கடன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
  • Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme