Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை

பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை

Posted on February 6, 2020

பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20 இடங்கள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 24 கோடி ரொக்கம், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை
இதைத் தொடர்ந்து மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர். இரவு 9 மணிக்கு விஜய்யுடன் சென்னை வந்து சேர்ந்தார்கள்.

சென்னை சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் பனையூர் வீட்டில் விடிய, விடிய சோதனை நடந்துள்ளது. விஜய் வீட்டில் 8 அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆபீஸ் ரெய்டில் ரூ. 24 கோடி, தங்க நகைகள் பறிமுதல்

இந்நிலையில் விஜய்யின் வீட்டிற்கு முன்பு துப்பாக்கிய ஏந்திய போலீசார் 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வைத்தே விஜய்யிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த திடீர் சோதனையால் மாஸ்டர் படப்பிடிப்பு நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பை இன்று தொடர திட்டமிட்டார்கள். ஆனால் விஜய் வீட்டில் இன்னும் சோதனை நடந்து வருவதால் படப்பிடிப்பு தொடர்வது சந்தேகம் தான்.

மஞ்சு பார்கவியை திருமணம் செய்த யோகி பாபு: ரஜினி சொன்னது மாதிரியே நடந்துடுச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா*
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
  • ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே  நடித்த “தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது!!
  • *‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme