Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

முதலில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

Posted on May 22, 2019

இந்த ஒப்புகை சீட்டு வாக்களிக்கும் போது சில வினாடிகள் அந்த எந்திரத்தில் தெரியும். பின்னர் எந்திரத்துடன் உள்ள பெட்டியில் சேமிக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடிகளை சேர்ந்த ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. உதாரணத்துக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் இருந்தால் 30 வாக்குச்சாவடியில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு கடைசியில் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

ஆனால் இதை முதலில் எண்ண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகும்.

ஒரு வாக்குச்சாவடியில் குளறுபடி காணப்பட்டாலும் சட்டசபைத் தொகுதியில் உள்ள அனைத்து சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பதிவு மற்றும் விவிபாட் அச்சிட்ட பதிவுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் எந்தஒரு மாற்றமும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் 7-வது தேசிய அளவிலான எண்கணிதப் போட்டி அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்
  • *இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்*
  • அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme