ICF ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் முதல்முறையாக ஏசியுடன் கூடிய மின்சார ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது

சென்னை:
தமிழகத்தில் முதல்முறையாக ஏசியுடன் கூடிய மின்சார ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை பயணிக்கின்றனர். பணிக்கு செல்வோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பயணிப்பதால் தினமும் இந்த ரயில் தடம் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் இந்த வழித்தடை மேம்படுத்த தெற்கு ரயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மும்பையை போன்று சென்னை முதல் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயிலை இயக்க திட்டமிட்டு ரயில்வேதுறை, அதற்கான பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் மின்சார ரயிலில் ஏசி வசதியுடன் கூடிய சேவை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தற்போது இருக்கும் ரயில்களில் ஏசி வசதி கொண்ட வகுப்புகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட சற்று அதிகமாக ஏசி மின்சார ரயிலில் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்தால் மக்களிடம் இந்த ரயில் சேவை வரவேற்பை பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்ட போது, ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு இல்லையென்றாலும் தற்போது அதிக பயணிகள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *