Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என ஜெர்மனி கூறியுள்ளது

Posted on May 21, 2019

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் உள்ளன. தற்காலிக உறுப்பினர்களாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 நாடுகள் உள்ளன. இந்த 10 தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு, அந்த இடத்துக்கு வேறு நாடுகள் தேர்வு செய்யப்படும்.


பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக உறுப்பு நாடுகளும் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. இருப்பினும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகள் இருப்பது முற்றிலும் அவசியமான ஒன்றாகும் என பிரான்ஸ் தெரிவித்தது. இப்போதைய நிலையை பிரதிபலிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மற்றும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும் எனவும் இதில் மறு கேள்விக்கே இடம் இல்லை, இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும் எனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவை தெரிவித்தாலும் ஐ.நா. பாதுகாப்பு விஸ்தரிப்பு என்பது கானல் நீராக தொடர்கிறது. இப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என ஜெர்மனி கூறியுள்ளது. இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டனர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தன்னுடைய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வால்டர் ஜெ லிண்டனர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என ஜி4 நாடுகள் வலியுறுத்தி வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தரமான உறுப்பினர் பதவியை கொடுக்க வேண்டும். 1.4 பில்லியன் மக்களை கொண்ட இந்தியா இன்னும் நிரந்தரமான உறுப்பினர் பதவியை பெறவில்லை. இது கேட்கப்படாதது. இதுபோன்று தொடரக்கூடாது, இது ஐ.நா அமைப்பின் நம்பகத்தன்மையை அது பாதிக்கும் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme