Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பிரியங்கா காந்தி தொண்டர்கள் வேண்டுகோள் நம்பிக்கை இழக்க வேண்டாம்

Posted on May 21, 2019

புதுடெல்லி,

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பாலும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைவிட அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன.

இந்த நிலையில், கருத்துக் கணிப்புகளால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:- கருத்துக்கணிப்பால் யாரும் சோர்வடைய வேண்டாம். நம்பிக்கையும் இழக்க கூடாது. நமது கடின உழைப்பு வெற்றியை தரும். நமது உழைப்பு வீண் போகாது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியேயும், ஓட்டு எண்ணும் மையத்திற்குள்ளும் நமது முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்
  • அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –
  • துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
  • விஸ்வநாத் அண்ட் சன் திரை விமர்சனம்
  • கிரிப்டோ டு மெத்தபெட்டமைன்… கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்… பாயுமா நடவடிக்கை?
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme