Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தி கொண்டு விட்டது

Posted on May 21, 2019

புதுடெல்லி,

மோடியின் படத்தை இலச்சினையாகக் கொண்ட நமோ டிவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கியது. 24 மணி நேரமும் மோடியின் பேச்சுக்களை இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

தேர்தல் காலத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நமோ தொலைக்காட்சிக்கு டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியும் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனிடையே, மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் 19ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. அன்றைய தினத்திலேயே நமோ தொலைக்காட்சியின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டு விட்டது.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் பாஜக பிரசாரத்துக்காகவே நமோ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால், அந்த தொலைக்காட்சி இனி தேவையில்லை. ஆதலால் 17-ஆம் தேதியிலிருந்து தனது ஒளிபரப்பை நமோ தொலைக்காட்சி நிறுத்தி கொண்டு விட்டது” என்றார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme