Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நிதியமைச்சர் அருண் ஜெட்லி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

Posted on May 21, 2019

டெல்லி:


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம். ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது.

பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 2014-ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த தேர்தலிலும் எடுபடவில்லை. தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க்கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme