கருத்துக்களை பதிவு செய் FIRST LOOK Poster Launch

கருத்துக்களை பதிவு செய் FIRST LOOK Poster Launch

” கருத்துக்களை பதிவு செய் ”
கருத்துக்களை பதிவு செய் FIRST LOOK Poster Launch

“எழுச்சித் தலைவர் ” தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் வெளியீடு !

சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளப் படம் ” கருத்துக்களை பதிவு செய் ”

இப்படத்தின் முதல் விளம்பர பதாகையை ( First Look Poster ) பாராளுமன்ற உறுப்பினர் ” எழுச்சித் தலைவர் ” தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டார்.

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார்.

படத்தின் இயக்குனர் ராகுல் மற்றும் படக் குழுவைச் சேர்ந்த ஜே.எஸ்.கே.கோபி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தோழர் தொல் திருமாவளவன் அவர்கள்,
இது போன்ற திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தோழர் வண்ணியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *