Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
செந்திலுக்கு பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

செந்திலுக்கு பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

Posted on November 2, 2019

சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள பாஸ்கர் காலனி 3 ஆவது தெருவில் செந்திலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. 10 அறைகள் கொண்ட இந்த கட்டிடத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு சகாயராஜ் என்பவர் மாதம் ரூ.2 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார். மேலும், அந்த கட்டிடத்தை சர்வீஸ் அபார்ட்மெண்டாகவும் மாற்றியுள்ளார்.

இந்த நிலையில், தான் கடந்த 6 மாதமாக வாடகை வராததால், சந்தேகத்தின் அடிப்படையில், தனது வீட்டைப் பார்க்க நேரில் வந்துள்ளார். அப்போதுதான் செந்திலுக்கு எல்லாமே தெரியவந்துள்ளது. அதில், தனது வீட்டை சகாயராஜ் தனது வீடு என்று கூறி 7 ரூமை லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டு அவர்களிடம் பணம் பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, செந்தில் இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சகாயராஜை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், தலைமறைவாக சுற்றித்திரிந்த சகாயராஜை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தினி நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சகாயராஜ் தற்போது சிறையில் இருக்கிறார். அவர் சினிமா துறையில் புரோடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
  • Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme