Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Posted on May 19, 2019

சென்னை:

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூறிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் மழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர், ஏற்காட்டில் தலா 2 செ.மீ., கூடலூர், வால்பாறை தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், இன்று லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,
  • மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
  • தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme