தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெவோல்ட் ஆர்.வி.300, ஆர்.வி.400 மற்றும் ஆர்.வி.400 பிரீமியம்

Revolt-Electric-Motorcycle-Deliveries-Begin_indiastarsnow

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் துவங்கியது. முதற்கட்டமாக டெல்லியில் விநியோகம் துவங்கப்பட்டுள்ளதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ரெவோல்ட் ஆர்.வி.300, ஆர்.வி.400 மற்றும் ஆர்.வி.400 பிரீமியம் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய துவங்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து புனேவில் அடுத்த மாத வாக்கில் விநியோகம் துவங்கும் என ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2019 ஆண்டிற்கான வாகனங்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்தது. தற்சமயம் அடுத்த ஆண்டிற்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் மாத தவணை முறை வசதியில் கிடைக்கிறது.

மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஏ.ஐ. தொழில்நுட்பம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

ரெவோல்ட் ஆர்.வி.400 மாடலில் 3கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.24 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் மூன்று ரைடிங் மோட்கள் வெவ்வேறு கிலோமீட்டர் மற்றும் வேகத்தில் கிடைக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *